ஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு....
திருப்பூர் ஊத்துகுளி சாலையில் உள்ள...நண்பரின் நண்பர் ஏற்றுமதி நிறுவனத்தில்
மின் அளவி (மீட்டர்) பழுதாகி மின் தடை ஏற்பட்டதால் சம்பந்தபட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்கள்....
மீட்டருக்கான கட்டணம் போக ”முறைப்படி” கட்ட வேண்டிய கட்டணத்தையும் சொல்லியிருக்கிறார்கள்...கிட்டதட்ட ஒரு அரசு ஊழியரின் ஒரு மாத சம்பளமான முப்பது ஆயிரங்கள் ....மின் தடையிலும் ஷாக் அடித்ததைவிட அதிக அதிர்ச்சி அடைந்து ... நண்பர் மூலம் என்னை அழைத்தார்கள்...
ஒரே போன்.... யாருக்காக பணம் கேட்கபட்டதோ அந்த ”அம்மையாருக்கே”
தொடர்பு கொண்டு ”என்னா ”முடி”க்கு இந்த பணம்”... எனவும்... அவர்களுக்கும் தெரிந்த சில சட்ட சங்கதிகளை சொல்லி ... இரண்டு நிமிட ”சிறப்புரை”க்கு பின்.... அலுவலகத்துக்கு வாங்க பேசிக்கலாமுன்னு சொல்ல.... பேரம் பேசவானு கேட்க... இல்லை இல்லை நேரில் வர சொல்லுங்க...உடனே சரி செய்து தருகிறோம் என சொல்ல...
உடன் அரசு நிர்ணய்த்த தொகை மட்டுமே செலுத்தி மீட்டர் மாற்றி மின் தடை நீங்கியது....
மூன்று நாள் மின் தடையால் கிட்டதட்ட ”பஜாரி”த்தனமாக அவர்கள் கேட்ட முப்பது ஆயிரங்களுக்கும் மேல் உற்பத்தி இழப்பு.... இருந்தும் போரடி பெற்றதில் நண்பருக்கும் நண்பரின் நண்பருக்கும் அளவற்ற ஆனந்தம்....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....
பல ஆயிரம் கோடிகள் நட்டத்தில் மின் வாரியமும் அரசும் தள்ளாட அதைவிட பல்லாயிரம் கோடிகள் இது போன்ற அதிகாரிகளின் கைக்கு போகிறது....
கொசுறு தகவல்- மேற்கண்ட சம்பவத்தில் சமபந்தபட்ட அதிகாரியின் கணவரே “என் மனைவி அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்குகிறார். நடவடிக்கை எடுங்கள்” என உயரதிகாரிகளுக்கு புகார் செய்ததால் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்ததாக கேள்வி.... திருப்பூருக்கு மாறுதல் செய்து ”தண்டனை” கொடுத்த அந்த உயரதிகாரிக்கு கோவில் கட்டித்தான் கும்பிடனும்....
யாராவது எந்த அலுவலகம் .... எந்த அதிகாரி ... என்ன போன் நம்பருனு தேடி கண்டு பிடிச்சு.... அர்ச்சனை செய்து சந்தோசபட்டால் சமூகம் பொருப்பல்ல.... ஏன்னா....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....
3 comments:
அண்ணா என் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வாங்க வேண்டும் ஆன்லைன் பதிவு செய்ய கட்டணம் எவ்வளவு மின்வாரியத்தில் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு கொஞ்சம் சொல்லுங்களேன்
அண்ணா என் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வாங்க வேண்டும் ஆன்லைன் பதிவு செய்ய கட்டணம் எவ்வளவு மின்வாரியத்தில் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு கொஞ்சம் சொல்லுங்களேன்
பதிவுகட்டணம்-ரூ.50.
மீட்டர் கட்டணம் ரூ.700
வைப்பு தொகை ரூ.200
மேம்படுத்துதல் கட்டணம் ரூ.400
இணைப்புக்கட்டணம் ரூ. 250.....
Post a Comment