Tuesday, February 17, 2015

கேட்டால் கிடைக்கும்

தலைநகர் டில்லியில்....
5.2.2015....
டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ...
ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில்
சாப்பிட சென்றேன் நண்பருடன்....
அது ஒரு சுய சேவை உணவகம்...
பணம் தந்து பில் போட்டு பின் உணவை வாங்கி
ஓரமா நின்னு சாப்பிடனும்ங்கறது அந்த விடுதியின் விதி....


மொழிபுரியாமல் .... ஏதோ ஏதோ பேசி....
ஏதோ வாயில் நுழையாத அய்யட்டங்கள்
ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு ....
தண்ணீர் கேட்டேன்...
வந்ததே வினை....

அங்கிருந்த அழகு மயில் வடமொழியில் சிரித்துக்கொண்டே...
கல்லா பொட்டியை கைகாட்டி ஏதோ கதைத்தது.....

கல்லா பொட்டியை கவனித்து கொண்டிருந்த ...
கல்லூரி மாணவன் போலிருந்த ஒருவன்..
...
என்னிடம் வா .... பணம் கொடு ... ரசீது தருகிறேன்...
அப்பறம் போய் ரசீதை கொடுத்து ....
தண்ணீர் வாங்கி குடி...
அது வரைக்கும் விக்கல் எடுக்கட்டும் ... என்று
அவன் மொழியில்  அவன் சொல்வது எனக்கு புரிந்தது....

என்னடா இது சோதனை...
தமிழில் பேசினாலே தொண்டை வரண்டு போகுமளவிற்கு...
கத்தி பின் தண்ணி வாங்கி குடிக்கனும்...
இதென்னடா வம்பா போச்சே....

சும்மாவே ......
நாமொன்னு சொல்ல அவங்க ஒன்னு புரிஞ்சுக்கறாங்க....
இதுல எங்க போய் சண்டை போட்டு தண்ணீர் வாங்கறதுன்னு
நினைச்சாலும்.... முடிந்தளவு...
காசு கொடுத்து தண்ணீர் வாங்குவதில்லை என்ற
கொள்கை பிடிப்பை கைவிட மனதில்லாமல்....

“மேம்...
யூ நவ் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் இன் நைண்டீன் நைண்ட்டீ எய்ட்...
எனி  ரெஸ்டாரண்ட், ஹோட்டல்ஸ் ஆர் புட் கோர்ட்
கம்பள்சரி  பிரி டிரிங்கிங் வாட்டர் சர்வீஸ்” .... என
எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அடிச்சு விட்டேன்....

சண்டை போடும் விதத்தில் கோபமாக நான் பேசியும்
முன்பை விட அழகாக சிரித்து கொண்டே அந்த பைங்கிளி
பைசா கட்டிட்டு வா ... பானி தருகிறேன் என
பழைய பல்லவியே வாசித்தது ....

“மேம் யூ அண்டர் ஸ்டேண்டிங் மை பிராப்ளம்” என கேட்டதும் தான்
புரிந்தது  எனக்கெப்படி தமிழ் மட்டும் தெரியுமோ.... அது போல
அதற்கு ஹிந்தி மட்டுமே தெரியும் போல...

தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த...
 கல்லா பெட்டி கதாநாயகன்...
ஓடி வந்து அந்த குளிர் நேரத்திலும்....
குளு குளுன்னு புது தண்ணீ பாட்டில் கொடுத்து புன்னகைத்தான்...
நன்றி சொல்லி தாகம் தணித்தோம்....

போராடி குடித்த தண்ணீர்....
மனதிற்கினிதாக ”சிறுவானி” தண்ணீரை விட
அருமையாக இருந்தது ....

அப்போது தான் புரிந்தது...
போராடி கிடைக்கும் தண்ணீரின் சுவை....

ஆகவே தான் சொல்கிறோம் ....
கேளுங்கள் கொடுக்கப்படும்....

4 comments:

Swaminathan Gopalakrishnan said...

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க கூட என் மொழியில் பேசினாத்தான் தண்ணீர் தருவேன் என்று இறுமாப்புடன் பதில் சொன்ன ஹிந்திகாரன் ஒழிக. தமிழைத்தவிற பிற மொழிகளைப் படிக்காதே என்று எம் இன மக்களை மொழிக்கு அடிமையாக்கி கடைசி வரை அவனை தன் அடிமையாக வைத்திருக்கும் தமிழீன தலைவர்களின் சுயநலம் ஒழிக

Sriram Ramanujam said...

இப்படி ஒரு சட்டம் (Free compulsory Driking water service) இருக்கா ?..

எல்லா Food court லும், குறிப்பாக IT company இருக்கின்ற....Already service Tax, VAT nu எந்தவொரு Food வாங்கினாலும்... okay இது எல்லாம் Govt ku போகுதுனு வைத்து கொண்டாலும்..... Mineral Water கொள்ளை தடுக்க முடியவில்லை...
Govt டே இதை செய்யும் பொழுது... யாரிடம் சொல்ல முடியும்...

தமிழ்,தமிழ் என்று... தேசிய மொழியை (Hinidi) தமிழ்நாட்டில் அழித்த பெருமை திராவிட கட்சிக்களை மட்டும் சாரும்.......அனைத்து மாநிலமும் தேசிய மொழியை இரண்டாவது மொழியாக வைத்தது உள்ளது. அவர்கள் மொழி ஆழிந்துவிடவில்லை......

Unknown said...

அங்கேயே சாப்பிட அனுமதிக்கும் உணவு விடுதிகளில் கட்டாயமாக சுத்தமான தண்ணீரும் சுகாதாரமான கழிப்பிடம் இருக்க வேண்டும் என்பது சட்டம்.. ஸ்ரீராம் ராமானுஜம்

balak said...

அந்த பைங்கிளி போட்டோவ போடலேங்கேய்யா ? போட்டோவ போடுங்க.