Saturday, December 29, 2018

கண்ணதாசன்

"காலமெனும் தெய்வமகள் கையிலுள்ள துலாக்கோலில்
எந்தஎடை எப்போழுது எவ்வளவென்று யாரறிவார்.
முன்னுமொரு காலமதில் மலையேற்றி வைத்தாலும்,
பின்னுமொரு காலமதில் பெரும்பள்ளம் தோன்றிவிடும்.
ஒரு நாள் உடல் உனக்கு உற்சாகமிருக்கும் - மறுநாள்
தளர்ந்து விடும் மறுபடியும் தழைத்து விடும்.

ஆள் ,அம்பு, சேனையுடன் அழகான வாழ்வு வரும்.
நாள் வந்து சேர்ந்து  விட்டால்! நாளும் கருகிவிடும்.
எல்லோருக்கும் ஏடெழுதி இறைவன் வைத்திருக்க,
பொல்லாத காலமென புலம்புவதில் லாபமென்ன ?
ஜாதகத்து ராசியிலே சனிதிசையே வந்தாலும்,
பாதகத்தை வழங்காமல் பரிசு தரும் காலம் வரும்.


எவனோ ஒருவன் உனைனேற்றி புகழ்வதுண்டு,
மகனே! தலையெழுத்தாய் மாற்றம் பெறுவதுண்டு.
பல்லாயிரம் ஆண்டு பாராண்ட தலைமுறையும்,.
செல்லாத காசாகி தெருவிலே அலைவதுண்டு.
மன்னர்கள் போனதுண்டு மந்திரிகள் வந்ததுண்டு.
மந்திரியை அழித்து விட்டு மாசேனை ஆள்வதுண்டு.

 மாசேனை நடுவினிலே விளையாடும் ,!  காலமகள், 
சதிசெய்வாள் ! சிலநேரம் தர்பாரில் ஏற்றிவைப்பாள்.
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்கணக்கு.
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன் வழக்கு.
நாளை பெரும் நன்மை நடக்குமென விதி இருந்தால்!
இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே வந்து நிற்கும்.


போகின்ற வண்டியெல்லாம் ஊர் சென்று சேர்ந்து விட்டால்,
தேடுகின்ற கோவிலை நீ, தேடாமல் போய்விடுவாய்.
காதலியாய் வேஷமிட்ட கட்டழகு நடிகையெல்லாம்.
தாயாய் வேஷமிட்டு தடியூன்றி வருவதெல்லாம்.
காலமகள் விட்டெறிந்த கல்லால் விளைந்த கதை.
சட்டியிலே வேகின்ற சரக்கெல்லாம் சத்தானால்!

மட்டின்றி படித்து வந்த மருத்துவருக்கு வேலையென்ன?
ஆலமரம் தளருங்கால் அடிமரத்தை விழுது தொடும்.
நீ இழந்த பெருமையெல்லாம் நின்மக்கள் பெறுவதுண்டு.
நீ இழந்த செல்வமெல்லாம் நின்பேரன் அடைவதுண்டு.
வளமான ஊருணி நீர் வற்றாமலே இருந்தால்,
புதிதான நீர்  உனக்கு பூமியிலே கிடைக்காது!


இதனாலே, சோர்வடைந்தால் அடுத்த கடை திறக்காது.
ஞானத்திலே நீ ஒருவன் நடந்து உன் நாடகத்தை,
காலத்தின் சிந்தனையின் கனவேனவோ? நனவெனவொ ? "
                                                
                                                                               கவிஞர் கண்ணதாசன். 

Friday, November 16, 2018

பஜாரித்தனமான பகல் கொள்ளை

ஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு....
திருப்பூர் ஊத்துகுளி சாலையில் உள்ள...நண்பரின் நண்பர் ஏற்றுமதி நிறுவனத்தில்
மின் அளவி (மீட்டர்) பழுதாகி மின் தடை ஏற்பட்டதால் சம்பந்தபட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்கள்....
மீட்டருக்கான கட்டணம் போக ”முறைப்படி” கட்ட வேண்டிய கட்டணத்தையும் சொல்லியிருக்கிறார்கள்...கிட்டதட்ட ஒரு அரசு ஊழியரின் ஒரு மாத சம்பளமான முப்பது ஆயிரங்கள் ....மின் தடையிலும் ஷாக் அடித்ததைவிட அதிக அதிர்ச்சி அடைந்து ... நண்பர் மூலம் என்னை அழைத்தார்கள்...
ஒரே போன்.... யாருக்காக பணம் கேட்கபட்டதோ அந்த ”அம்மையாருக்கே”
தொடர்பு கொண்டுஎன்னா ”முடி”க்கு இந்த பணம்”... எனவும்... அவர்களுக்கும் தெரிந்த சில சட்ட சங்கதிகளை சொல்லி ... இரண்டு நிமிட ”சிறப்புரை”க்கு பின்.... அலுவலகத்துக்கு வாங்க பேசிக்கலாமுன்னு சொல்ல.... பேரம் பேசவானு கேட்க... இல்லை இல்லை நேரில் வர சொல்லுங்க...உடனே சரி செய்து தருகிறோம் என சொல்ல...
உடன் அரசு நிர்ணய்த்த தொகை மட்டுமே செலுத்தி மீட்டர் மாற்றி மின் தடை நீங்கியது....
மூன்று நாள் மின் தடையால் கிட்டதட்ட ”பஜாரி”த்தனமாக அவர்கள் கேட்ட முப்பது ஆயிரங்களுக்கும் மேல் உற்பத்தி இழப்பு.... இருந்தும் போரடி பெற்றதில் நண்பருக்கும் நண்பரின் நண்பருக்கும் அளவற்ற ஆனந்தம்....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....
பல ஆயிரம் கோடிகள் நட்டத்தில் மின் வாரியமும் அரசும் தள்ளாட அதைவிட பல்லாயிரம் கோடிகள் இது போன்ற அதிகாரிகளின் கைக்கு போகிறது....

கொசுறு தகவல்- மேற்கண்ட சம்பவத்தில் சமபந்தபட்ட அதிகாரியின் கணவரே “என் மனைவி அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்குகிறார். நடவடிக்கை எடுங்கள்” என உயரதிகாரிகளுக்கு புகார் செய்ததால் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்ததாக கேள்வி.... திருப்பூருக்கு மாறுதல் செய்து ”தண்டனை” கொடுத்த அந்த உயரதிகாரிக்கு கோவில் கட்டித்தான் கும்பிடனும்....

யாராவது எந்த அலுவலகம் .... எந்த அதிகாரி ... என்ன போன் நம்பருனு தேடி கண்டு பிடிச்சு.... அர்ச்சனை செய்து சந்தோசபட்டால் சமூகம் பொருப்பல்ல.... ஏன்னா....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....

Thursday, May 4, 2017

இணையம் மூலம் மின் இணைப்பு

நண்பர் ஒருவர் புதிய மின் இணைப்பு லஞ்சமில்லாமல் வேண்டும் 
என்ன செய்வது என கேட்க .. 
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனாலும் போகட்டும் நமக்கேன் வம்பு ... 
எனஒதுங்கியிருந்த மிருகம் விழித்தெழ.... 
பளிச்சென பல்ப் எரிந்தது...

இணையம் மூலமாக புதிய மின் இணைப்பு பதியலாமே என சம்பந்தபட்ட துறையிலிருந்த நலம் விரும்பும் நண்பரை அழைத்து விபரங்கள் கேட்டறிந்து....
புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து
விண்ணப்ப கட்டணம் ரூ.50.ம் செலுத்தினேன்...
தேநீர் அருந்தும் நேரம் கூட செலவாகவில்லை....
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட்டதாகவும்...
சம்பந்தபட்ட அலுவலகத்தினர் தொடர்பு
கொள்வார்கள் எனவும்....
மின்னஞ்சல் உடனே வந்தது...
ஏழு நாளில் இணைப்பு வந்திடுமாம்...

பல நாள் அலைந்து பின்பு ...
அழைத்து களப்பணி பார்த்து காசு
அளந்து பின்பு விண்ணப்பம் வாங்கி ..
அதில் நொட்டை ... இதில் நொட்டை என
சாக்குச்சொல்லி... வற்றிய பசு மடியில் ரத்தம்
கறப்பது போல ஏழை வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் கொள்ளை கூட்டத்திடம் இருந்து தப்பிய நண்பர்
மகிழ்வுடன் சொன்னார்.... இது போன்ற வசதிகள்
அனைத்து துறைகளிலும் வரனும் ....னு...
என்ன வசதிகள் வந்தாலும் ....
சாமி வரம் கொடுத்தாலும்
பூசாரி கெடுக்கும் கதைதான் நடக்கும்... 
விண்ணப்பிக்க...
http://www.tnebltd.gov.in:8080/nsconline/

Tuesday, August 9, 2016

கேளுங்கள் ... கொடுக்கபடும் ...

”இலஞ்சமில்லா திருப்பூர்”.. வெற்றி சரித்திரம்...





கடந்த 30.07.16 அன்று, திருப்பூரில், 
நேர்மை மக்கள் இயக்கம் சார்பில், சகாயம் ஐ ஏ எஸ் அவர்களால்
"லஞ்சம் இல்லா திருப்பூர்" பரப்புரை தொடங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர் R Anandan அவர்கள்
என்னிடம் தயக்கமாக மின் துறை சம்பந்தமான ஒரு 
பிரச்சனையை பற்றி சொன்னார். (நமக்கு அல்வாவாச்சே)
திருப்பூர் ஆண்டிபாளையம் மின் பிரிவு அலுவலகத்தில்
புது இணைப்பு வாங்க முறையாக பணம் கட்டி ரசீது 
வாங்கியாச்சு.. ஒரு மாசம் கழிச்சு வாங்கனு அலுவலர்கள் சொல்லியிருக்காங்க... . 
ஆனால் அங்கிருந்த “அன்பு” என்ற
அன்பே இல்லாத ஊழியர் “என்னை முறைப்படி கவனிச்சா
தான் உனக்கு லைன் வரும் ... இல்லைனா கரண்டே கிடைக்காம செஞ்சுருவேனு”
மிரட்டியிருக்கிறார்....
( அன்பு செல்வனின் அலைபேசி எண் 9842690890 )
நமக்காக நம் காசில் சம்பளம் வாங்கி வேலை செய்யும்
நம்ம வேலைக்காரன் ... நம்மை மிரட்டுவதா ... 
என்ன ஆனாலும் சரிங்க .... 
கரண்ட்டே கிடைக்காட்டியும் பரவாயில்லை...
 எதனாச்சும் செய்யுங்கனு..... 
நண்பர் ஆனந்தன் சொல்ல....

நமக்கேன் வம்பு .... இனி
எதிலும் ஒதுங்கி இருக்கலாம்... என நினைத்திருந்த
குரங்கு மனம் விழித்து கொண்டு.....
சின்ன கல்லை போடலாமுன்னு .... 
மின் மாவட்ட கண்காணிப்பாளருக்கு ஒரே ஒரு ...
மின்னஞ்சல் மட்டுமே தட்டிவிட்டேன்....
(setrpr@tnebnet.org )
ஒரு மாசம் கழித்து வரவேண்டிய மீட்டர்....
ஜீம்பூம்ம்பா.... போட்ட மாதரி....
இரு நாட்களில் மீட்டர் வந்து விட்டது ....னு சொல்லி
லைன் கொடுத்துட்டு சினேகமாக சிரித்துவிட்டு சென்றனர்...
மின் துறை ஊழியர்கள்....
தட்டுங்கள் ... திறக்கபடும்...
மெயிலை ... தட்டுங்கள்... லைன் கிடைக்கும்...
கேளுங்கள் ... கொடுக்கபடும் ...
லஞ்சமல்ல.... பில் தொகை மட்டுமே...

Tuesday, January 26, 2016

கேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....

புதிய எரிவாயு உருளை வாங்க  விசாரித்தேன் ..
திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்...

பகல் கொள்ளையாக இருந்தது.....
அடுப்பு கட்டாயம் வாங்கனுமாம்....
இரண்டு சிலிண்டர் வேணுமுன்னா ..
ஏதாவது பொருள் வாங்கனுமாம்....
கிட்டதட்ட எட்டாயிரம் ரூபாயாம்....

யோசித்தேன் ...
இருக்கவே இருக்கு ...
கூகுள் ஆண்டவர் தேடினேன்..கிடைத்தது....

ஆன்லைன் மூலம் பணம் கட்டி
எரிவாயு உருளை இணைப்புக்கு விண்ணப்பித்தேன்..

பணம் செலுத்த ...இணைப்பு வாங்க...
நேரில் போகவே இல்லை ...

அலுவலகமே அல்லோல பட்டு ...
அலை பேசியது... ... இது என்ன முறை ...
எங்களுக்கே தெரியலை..னு கதறியது...

எனக்கொன்றும் அவசரமில்லை ...
முறை தெரிந்து .... வழி கண்டு ..... பின்பு வாருங்கள்...
என்று கூலாக சொன்னேன்... அலைபேசியில்...

ஏழாவது நாளில் ...
இரண்டு உருளையுடன் அடுப்பு தவிர
அனைத்து உபகரணங்களும் வீடு தேடி வந்தது...
மொத்த செலவு - ரூ.3570 மட்டுமே....
...
ஒரு மாதம் ஆகிருச்சு....
எரிவாயு மறு உபயோகத்திற்கும்
இணைய வழியில் பதிந்தேன்...
நம்மை பற்றி தெரிந்து கொண்ட இணையம்
”இப்போதே பணம் கட்டுகிறாயா”னு கேட்டுச்சு...

ஆஹா ...
அருமை என உடனே பணம் கட்டினேன்...

எந்தவிதமான பேரமும் பேசமால்...
0.00 என்ற  பில் தொகையுடன்....
இரண்டே நாளில் எரிவாயு உருளை வந்தது...

”அண்ணே....நீங்க தான் இந்த முறைப்படி பர்ஸ்ட் கஸ்டமர்”
என சிரித்தமுகத்துடன் எரிவாயு உருளை
விநியோகித்து சென்றார்... முகவரின் ஊழியர்...


மாற்று எரிவாயு உருளை பெற

- புதிய இணைப்பு பெற..

Tuesday, September 1, 2015

நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....

என்ன கொடுமை சார் இது....

மேலை நாட்டில் அவனவன் வேலையை
செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்.....
..
கீழை நாட்டில் அவன் வேலையை விடுத்து
அபாயகரமான செயல் செய்ய லஞ்சம் வாங்குகிறான்...
..
பாழாய்ப்போன பாரதத்தில் தான் அவன் வேலையை அவன்
செய்யவே லஞ்சம் வாங்குகிறான்... என
எங்கோ படித்த ஞாபகம்....
...
அட அஞ்சு பத்து ... வாங்குவதற்கே .... பயந்து பயந்து
வாங்குறவங்க மத்தியில ....
கூசாம வெளிப்படையா ... 100 சதம் பணம் அதிகம் கேட்டு
வாங்கறாங்களேன்னு கோபபட்டா.... எதிர்த்து கேட்டா...
 நம்மளை பொழைக்க தெரியாதவன்னு முத்திரை குத்தறாங்க.....
உனக்கு இதே வேலையா போச்சுன்னு திட்டறாங்க....

சரிப்பா...
வம்பு வழக்கு இல்லாம ஒரு வேலை செய்யலாமுன்னு..
என்னோட கடைக்கு தனி EB லைன் எடுக்க... போனேன்...
மூனு மாசமா அதை கொண்டா...
இதை கொண்டா... அப்படி பண்ணு ... இப்படி பண்ணு...னு
சொல்லி ஒரு வழியா பணத்தை கட்டுங்க ...
லைன் கொடுத்தடலாமுன்னு நேத்து சொன்னாங்க...

எவ்வளவுன்னு கேட்டா ....
மூவாயிரம் ரூபான்னாங்க .....
அடிச்சு பிடிச்சு.... அடகு வச்சு ....நானும் கட்டினேன்....
இது போக ... லைன் மேனுக்கும் ....
போர் மேனுக்கும் தனியா அழுகனுமாம்...
பில்லு நாளைக்கு வாங்க ... வாங்கிக்கலாமுன்னாங்க....
அதுக்கும் சரின்னேன்..

இன்னைக்கு போனா....
50 ரூபாய்க்கு ஒன்னும் 1550 ரூபாக்கு ஒன்னும் கொடுத்தாங்க...
மீட்டர் வர ஒரு மாசம் ஆகும் ....
போனு பண்ணுவோம் .. அப்பறமா வாங்கன்னு சொன்னாங்க...
சரின்னு வந்துட்டேன்..... என்ன பண்ணறது...

லஞ்சம் கொடுத்தும் ஒரு மாசம் காத்திருக்கனுமாம்....
அப்பறம் என்னா டேஸுக்கு  அதிகமா பணம் வாங்கனும்...
அய்யய்யோ... நான் கோபபடல..சாரி....
.. சரி...சரி...விட்டுடலாம்....
நானும் பொழக்கனுமில்ல....
இப்பவாவது நான் நல்லவன்னு ஒத்துக்கங்க....
ஹய்யா.... 
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
...
ஒரு நிமிசம்...
என்னதுங்க.... எந்த ஆபிஸ்ங்களா....
திருப்பூர் தாராபுரம் ரோடுங்க....
அவங்க பேருங்களா....
எனக்கு தெரியலைங்க.....
என்னங்க...பணம் கேட்டதுக்கும், வாங்குனதுக்கும் ...அத்தாட்சியா....
இருக்குதுங்க... இருந்தும் என்ன பண்ண முடியுங்க.... 
அவங்க போன் நம்பர்ங்களா....
அது ...அது .....வந்து...
97894 84851...
AE-94458 51395 ... 
யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.......
அய்யய்யோ ... 
போனு கீனு பண்ணிடாதீங்க...
இப்படித்தான் ஆடு  வாங்க லோனு வாங்குனவரு...
லஞ்சம் தராததால.. அந்த ஆடு குட்டியே போடலையாம்....
....
அய்யோ  ... அய்யய்யோ ...
நான் எதுமே எதுத்து கேக்கலைங்க....
பணத்தை திருப்பி கொடுத்தா வாங்கிக்குவேன்னுங்க...
(ஏன்னா அடகு வச்ச நகையை மூட்டுடலாம் பாருங்க)
ஆனா கொடுக்கவா போறாங்க...
முதலை வாய்ல மாட்டுனா .. தப்ப முடியுமா...
அப்பறம் கொடுக்கலைனா...
கரண்ட் வராது... விட்டு விட்டு வரும்...
அப்பறம் அது சரியில்ல ... இது சரியில்லனு...
குத்தம் சொல்லுவாங்க.... நமக்கெதுக்கு வம்புங்க....
போனா போகட்டும் விடுங்க....


பிளாஸ் நீயூஸ்...
3.9.2015 காலை 10 மணியளவில்... 
மின் அலுவலக ஊழியர்கள் இருவர் நேரில் வந்து மீதம் 
பணம் ரூ.1400 ஐ  திருப்பி தந்து விட்டார்கள்...
அழைத்து பேசிய நண்பர்களுக்கு நன்றி...

எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வாங்கிய கதையை படிக்க...


Friday, August 7, 2015

லஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி?

திரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பதிவு செய்வது எப்படி ?. 2. பத்திர எழுத்தர் மூலமாக பத்திரம் எழுதும் போது எவ்வாறு லஞ்சம் தவிர்ப்பது ? 3. லஞ்சம் கொடுக்காமல் பத்திர பதிவு செய்யும் போது, நமக்கு பதிவு அலுவலகத்தில் ஏதேனும் இடையூறுகள், தடங்கல்கள் ஏற்படுமா ? 4. அவற்றை எப்படி சமாளிப்பது ? 5. வேறு முக்கிய விஷயங்கள் ஏதாவது உள்ளதா ?
என்பதையும் தெரியபடுத்துங்கள்..... நன்றி....

இது நண்பர் ஒருவரின் குறுஞ்செய்தியின் சாராம்சம்....

பலருக்கும் பயனுள்ள கேள்விகள் என்பதால் பதிவாக இங்கே...

முதலில் அனைவரும் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளவும்..
ஆவணங்களை பதிவு செய்வது சார்பதிவாளர் மட்டுமே தான்...
 அவருக்கு தரகு வேலை செய்து கல்லா கட்டுவது தான்
இந்த ஆவண எழுத்தர்களின் பிரதான வேலை..

பதிவு செய்ய போகும் ஆவணங்களை ஆவண எழுத்தர் தான்
எழுத வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது....

ஆவணத்தை எழுதி கொடுப்பவர்கள் ( சொத்தை விற்பவர்கள்) மற்றும்
தகுதி வாய்ந்த வழக்குரைஞர்களும்    ஆவணங்களை எழுதலாம்..

ஆவண எழுத்தர்களுக்கு அனுபவங்கள் அதிகம் ஆகவே
அவர்களை நாடுகிறார்கள் நம் மக்கள் ...
அவர்களும் அடித்து விடுகிறார்கள்..
(ஆவணங்களை டைப் அடிப்பதை சொல்கிறேன்)

லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் பதிவு செய்ய நினைத்தால்....

1. நல்ல ஆவண எழுத்தர் ஒருவரை அணுகி தெளிவாக
”எனக்கு ஆவணங்களை தயார் செய்தால் போதும் நானே பதிவு
செய்து கொள்கிறேன்” எனக்கூறி அதன் சம்பந்தபட்ட நகல்களை
கொடுத்தால் அவர்கள் தயார் செய்து தருவார்கள்...
முதலிலேயே அவர்களுக்கான உண்டான கூலியை பேசிக்கொள்ளுங்கள்.
அரசு வழிகாட்டும் கூலியைதான் அவர்கள் வாங்க வேண்டும்...
உதாரணத்திற்கு ஒரு விற்பனை ஆவணம் என்றால் ரூ.50 மட்டுமே...
ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லை .ஆகவே நியாயமான முறையில்
இருதரப்பும் பேசி கூலியை நிர்ணயத்து கொள்ளவும்...

2.முதல் முறையாக இருப்பின் ஆவண எழுத்தரிடமே
நடைமுறைகளை பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதையும்
நட்பாக பேசி தெரிந்து கொள்ளுங்கள் ...

3.எவ்விதமான சந்தேகம் என்றாலும் சம்பந்தபட்ட சார்பதிவாளர்
உங்கள் சந்தேகம் தீர்வாகும் வரை விளக்க கடமைபட்டுள்ளார்
என்பதை மறவாதீர்கள்..

4.எவ்வளவு தொகைக்கு ஆவணங்கள் வாங்க வேண்டும் ..
எவ்வளவு தொகைக்கு வரைவோலை எடுக்க வேண்டும் என்பதையும்
ஆவண எழுத்தரிடமோ இல்லை சார்பதிவாளரை நேரில் அணுகியோ
தெரிந்து கொள்ளுங்கள்...

5. சார்பதிவாளர் ஏதேனும் சங்கடபட்டலோ எரிந்து விழுந்தாலோ...
ஆவண எழுத்தரிடம் கேட்க சொன்னாலோ...
அய்யா ... எந்தவிதமான புரோக்கர்களையும் அணுக நான் விருமப வில்லை
இந்த அலுவலகத்தின் அதிகாரி நீங்கள் தானே ...
என் சந்தேகங்களுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்... இல்லையென்றால்
தகுந்த அலுவலரை பதில் சொல்ல பணியுங்கள் என்று
மென்மையாக சொன்னால் உங்கள் வேலை சுமூகமாக முடியும்..

6.இது போலவே தான் வில்லங்க சான்றிதழ், சான்றிட்ட நகல், போன்ற
சார்பதிவாளர் அலுவலக வேலைகளையும் லஞ்சம் தராமல் உரிய
பணம் செலுத்தி பெறலாம்.

7.மக்கள் ஆட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை மனதில் வைத்து
நம் செய்யும் செயல்கள் சட்டபடி இருந்தால்
லஞ்சம் கொடுக்காமல் எந்த செயலையும் செய்யலாம் ...

லஞ்சம் தவிர்.... நெஞ்சம் நிமிர்....