Friday, November 29, 2013

துரோகிகளை தண்டிக்க....

உனக்கு துரோகமிளைத்தவனை 
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில் அவன் அறைக்குள் 
பெட்ரோலூற்றி நெருப்பு வைக்கலாம்,

நல்லவிதமாய் உறவாடி நயவஞ்சக காய்களை 
நகர்த்தி வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்,

ஊர்பூராவும் அவனை பற்றி அவதூறு பரப்பலாம்,
பார்க்கிற இடத்திலெல்லாம்
பளாரென அவனை அறைய சீறிபாயலாம்,

விடுதியொன்றில் எதேச்சையாய் சந்திக்க
நேர்கையில் முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்,

கூலிப்படை கொண்டு குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்,

அவன் குடும்பத்தில் உட்பூசல் உண்டாக்கி நிலை குலைக்கலாம்.

காலம் முழுக்க அவன் செய்ததை
எண்ணி எண்ணி சபித்து கொண்டே இருக்கலாம்,

ஒவ்வொரு பொழுதும் அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்....

என்றாலும் எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறையப்‌ போவதே இல்லை....

ஆதலால் நீஅவனை மன்னித்துவிடலாம்...

படித்ததில் பிடித்தது...

கேட்டால் கிடைக்கும்


இன்று (13.11.2013) என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
கேட்டால் கிடைக்கும்