"காலமெனும் தெய்வமகள் கையிலுள்ள துலாக்கோலில்
எந்தஎடை எப்போழுது எவ்வளவென்று யாரறிவார்.
முன்னுமொரு காலமதில் மலையேற்றி வைத்தாலும்,
பின்னுமொரு காலமதில் பெரும்பள்ளம் தோன்றிவிடும்.
ஒரு நாள் உடல் உனக்கு உற்சாகமிருக்கும் - மறுநாள்
தளர்ந்து விடும் மறுபடியும் தழைத்து விடும்.
ஆள் ,அம்பு, சேனையுடன் அழகான வாழ்வு வரும்.
நாள் வந்து சேர்ந்து விட்டால்! நாளும் கருகிவிடும்.
எல்லோருக்கும் ஏடெழுதி இறைவன் வைத்திருக்க,
பொல்லாத காலமென புலம்புவதில் லாபமென்ன ?
ஜாதகத்து ராசியிலே சனிதிசையே வந்தாலும்,
பாதகத்தை வழங்காமல் பரிசு தரும் காலம் வரும்.
எவனோ ஒருவன் உனைனேற்றி புகழ்வதுண்டு,
மகனே! தலையெழுத்தாய் மாற்றம் பெறுவதுண்டு.
பல்லாயிரம் ஆண்டு பாராண்ட தலைமுறையும்,.
செல்லாத காசாகி தெருவிலே அலைவதுண்டு.
மன்னர்கள் போனதுண்டு மந்திரிகள் வந்ததுண்டு.
மந்திரியை அழித்து விட்டு மாசேனை ஆள்வதுண்டு.
மாசேனை நடுவினிலே விளையாடும் ,! காலமகள்,
சதிசெய்வாள் ! சிலநேரம் தர்பாரில் ஏற்றிவைப்பாள்.
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்கணக்கு.
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன் வழக்கு.
நாளை பெரும் நன்மை நடக்குமென விதி இருந்தால்!
இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே வந்து நிற்கும்.
போகின்ற வண்டியெல்லாம் ஊர் சென்று சேர்ந்து விட்டால்,
தேடுகின்ற கோவிலை நீ, தேடாமல் போய்விடுவாய்.
காதலியாய் வேஷமிட்ட கட்டழகு நடிகையெல்லாம்.
தாயாய் வேஷமிட்டு தடியூன்றி வருவதெல்லாம்.
காலமகள் விட்டெறிந்த கல்லால் விளைந்த கதை.
சட்டியிலே வேகின்ற சரக்கெல்லாம் சத்தானால்!
மட்டின்றி படித்து வந்த மருத்துவருக்கு வேலையென்ன?
ஆலமரம் தளருங்கால் அடிமரத்தை விழுது தொடும்.
நீ இழந்த பெருமையெல்லாம் நின்மக்கள் பெறுவதுண்டு.
நீ இழந்த செல்வமெல்லாம் நின்பேரன் அடைவதுண்டு.
வளமான ஊருணி நீர் வற்றாமலே இருந்தால்,
புதிதான நீர் உனக்கு பூமியிலே கிடைக்காது!
இதனாலே, சோர்வடைந்தால் அடுத்த கடை திறக்காது.
ஞானத்திலே நீ ஒருவன் நடந்து உன் நாடகத்தை,
காலத்தின் சிந்தனையின் கனவேனவோ? நனவெனவொ ? "
கவிஞர் கண்ணதாசன்.

2 comments:
நேற்று பழைய குப்பைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்தத் தாள் என் கண்ணில்பட்டது. எடுத்து வைக்க வேண்டும் என்று மறந்து விட்டேன். இன்று மீண்டும் என் கண்ணில் படுகின்றது.
Thank you
Post a Comment