இன்றைய சைட் விசிட்...(15.07.2015)
திருப்பூர் அரசு மருத்துவமனை
“அம்மா உணவகம்”...
காலை மணி 7.55...
மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சென இருந்ததால்
செயல்படுகிறதா இல்லையா என்ற சந்தேகத்துடன்...
உள்ளே நுழைந்தால்...
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பதினொரு பேர்...
உணவருந்தி கொண்டிருந்தனர்...
சிறார் சட்டத்தில் திருத்தம் வந்ததாலோ என்னவோ...
ஒரு சின்ன பையன் சுறுசுறுப்பாக டோக்கன் கொடுத்து...
மீதி பணத்தை வேகமாக எண்ணி கொடுத்தான்...
ஏதோ முன்னூறு பேர் லைனில் நிற்பதாக நினைத்து...
(பின்னாடி நல்லா வருவான்)
திருப்பூர் அரசு மருத்துவமனை
“அம்மா உணவகம்”...
காலை மணி 7.55...
மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சென இருந்ததால்
செயல்படுகிறதா இல்லையா என்ற சந்தேகத்துடன்...
உள்ளே நுழைந்தால்...
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பதினொரு பேர்...
உணவருந்தி கொண்டிருந்தனர்...
சிறார் சட்டத்தில் திருத்தம் வந்ததாலோ என்னவோ...
ஒரு சின்ன பையன் சுறுசுறுப்பாக டோக்கன் கொடுத்து...
மீதி பணத்தை வேகமாக எண்ணி கொடுத்தான்...
ஏதோ முன்னூறு பேர் லைனில் நிற்பதாக நினைத்து...
(பின்னாடி நல்லா வருவான்)
பார்சல் கிடையாது என்று அறிவிப்பு பலகை இருந்தாலும்
மனிதாபிமானமா இல்லை மீதம் ஆகிடும் என்ற பயத்தாலோ
ஜோராக பார்சல் வழங்கபட்டு கொண்டிருந்தது ...
வடநாட்டு வாலிபர்கள் பார்சல் வாங்க...
தேவையான பாத்திரங்களுடன் வந்திருந்தார்கள்...
(ரெகுலர் கஸ்டமர் போல)
அஞ்சு ரூபாய்க்கு அஞ்சு இட்லி வாங்கி அசைபோட்ட படியே
நோட்டமிட்டேன்...
நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும்.... உடன்
ஆட்டோ டிரைவர்களும் பசியாறினார்கள் ..
சாம்பார் சூப்பர்...
இட்லிதான் கொஞ்சம் புளித்திருந்தது....
அப்படியே பிசைந்து உள்ளே இறக்கி பசியாறிய பின்...
சுத்தம் பற்றி ஞானம் வந்தது...
100 எழுமிச்சைகளின் சக்தி கொண்டு தட்டுகளை கழுவி.... பின்
குளிந்த நீர் .... வென்னீர் என மிக அருமையாக
சுத்தமாக தட்டுகளை மட்டுமின்றி
அனைத்து பாத்திரங்களையும் கழுவுகின்றனர்...
அரசு மருத்துவ மனை என்பதால் மட்டுமல்ல
அனைத்து இடங்களிலும் இப்படித்தான் எனச்சொன்னார்கள்...
தினசரி ரூ.250 சம்பளம் வாங்கும் மீனாட்சி சுய உதவி குழு பெண்கள்..
ஆனால் வந்து செல்லும் பொது மக்கள் செய்யும்
அழிசட்டியங்களுக்கு அளவே இல்லை...
ஆங்காங்கே வெற்றிலை.... பான்பராக் எச்சில்கள்....
கொள்கை ரீதியாக அம்மா உணவகங்கள் திட்டம் மீது
வெறுப்பு இருந்தாலும் இது போன்ற
அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்துவது வரவேற்கதக்கது..
2 comments:
சுத்தம் பொதுமக்கள் வாயிலும் கையிலும் உள்ளது...
சரியாக சொன்னீர்கள் அண்ணா
Post a Comment