Wednesday, October 16, 2013

தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

நேசமோடு உன்னை நேசித்த போது
நெருப்பாக சுட்டாய்...
அன்போடு அறிவு தெளிவோடு பழகியபின் ...
வாஞ்சையோடு வாழலாம் என்ற போது
கனிவாய் கசிந்துருகி காத்திருக்க சொன்னாய்....
வாழ்வில் ஒரு திருப்பம்....
வஞ்சனை செய்தவனானேன்.....

தோழமையோடு தோள் கொடுத்து
நான் செய்த உதவிகளுக்கு....
காலத்தினால் நீ செய்தவை
ஈடாகுமா இனியவளே....

மண்வீடு கட்டி மனசு பூரித்ததும்
துக்கமயமான இடுகாட்டில்
இட்டுகட்டி நம்மை பேசியதும்...
துன்பத்திலும் இன்பமாக நாம் பேசியதும்...
இனியும் வருமா இனியவளே...

கண் காணாமல் போனால்
கவலை மறக்கலாம்...
காலம் நமக்கு கருணை காட்டலாம்...
எண்ண அலைகள் மோதும் உன் உள்ளம்...
என் நினைவு உண்டா... என ஏங்கும் என் உள்ளம்..
இம்மியளவும் மாறாது நம் இருவர் உள்ளம்...
கடல் தாண்டி கல் திரை இட்டு மறைத்தாலும்
மனதோரம் இருக்குமே சரவணனின்
தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றி அண்ணா