Wednesday, December 19, 2012

திருமண வாழ்த்து

                           சிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில்  கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வம்பு சண்டை அல்லது சிறு உதவி செய்யாத போது சகோதரி மூலம் தந்தைக்கு தகவல் பறக்கும். எனவே சகோதரி என்றாலே உடன் பிறந்த சகோதரனுக்கு ஆகாது, 
            சிறுவயது போராட்டம் குரோதம் .கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும். சகோதரி பெரியவளாக ஆனா பின்பு மரியாதை கலந்த பாசம் பிறக்கும் .சகோதரி மணவாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பிப்பது பாசத்தின் எல்லை என்றே கூறலாம்.
            சகோதரி, சகோதரனின் தியாகத்தை எவ்வளவு நாள் உள்ளத்தில் வைத்திருப்பாள் என்பது கால சக்கரத்தின் சுழற்சியும் வாழ்க்கை சூழ்நிலையுமே நிர்ணயிக்கும்.
      இப்படித்தான் `வீட்டில்அதிகாரம்  கொடிகட்டி பறந்த` தன் அருமை 
தங்கையான எங்கள் அத்தைக்கு எங்கள் அப்பா வரைந்த வாழ்த்து மடல்  
     
மணமகன் : பழனிசாமி - மணமகள் : தனலட்சுமி   
                     13.11.1972 திங்கள் கிழமை. 
                     இடம் :வெள்ளகோவில்
                    
இது வண்ணத்தால் அச்சிட்ட வாழ்த்தல்ல... 
உள்ளத்தால் உருவாக்கப்பட்ட ஓவியம். 
கோலமிட்ட மணவரையில் கைகோர்த்து 
கொஞ்சிவரும் முழுநிலவில் குலவிட துடிக்கும் புதுமணப்பூக்களே... 
அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்! 
என வாழ்த்தும் வாழ்த்தல்ல!! 

வாழ்க்கையின் வாசற்படியில் வலது காலை வைத்து நிற்கும் 
சிட்டுக்களுக்கு என் இதய...த்தில் பூட்டி வைத்திருந்த 
எண்ணங்களின் பொற்கலசம். . .

தங்குதடையின்றி கங்குகரை புரண்டு 
பொங்கிப்பெருகி வரும் காவிரியின் 
புதுப்புனல் போல துள்ளி வரும் என்
மனத்தின் எண்ண அலைகளை எழுத்தானியில் 
இழையவிட்டு இதயமென்னும் ஏட்டினிலே ஓடவிட்டு 
இருகரத்தால் ஏந்திவந்து வாய்திறந்து கொட்டுகின்றேன்.... 

கொங்குத்திருநாட்டின் தங்கமே... 
புலிக்குலத்துதித்த பொற்கொடியே.. 
மாவிலைப்பந்தலின்கீழ் மலர்விழி 
நிலம் நோக்கி நிற்கின்ற மாதரசியே.... 
எங்கள் குலப்பேரரசியே !!........ 

இன்று நீ வரப்போகும் வாழ்நாளின் 
இன்ப நினைவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கலாம் ...
ஆனால் நானோ கடந்த காலத்தில் பிறந்த பின்... 
வளர்ந்தபின்... ஓரளவு உலகத்தை அறிந்தபின்.. .........

அன்றுமுதல் இன்றுவரை மறைந்துபோன 
நாட்களில் மறக்க முடியாத சில 
பொன்னான நாட்களையும் புண்ணான நாட்களையும் 
சிந்தித்துப் பார்கின்றேன். ............

பள்ளிப் பருவத்திலே ஏட்டுக்கும் எழுத்தாணிக்கும் போட்டி,
தீபாவளித்திரு நாளிளே பட்டாசுக்குப் போட்டி, 
பொங்கள் புதுநாளிளே புத்தாடைக்குப் போட்டி, 
பங்கித்தரும் திண்பன்டம் சரிபாதியாயினும் 
அதிலே குறை நிறையென ஏளனச் சண்டை, 
பருவம் வந்தது அன்பிலும், பாசத்திலும், 
ஆயிரமாயிரம் சண்டை,,,

அவை அனைத்தும் இன்று என் கண்முன்னே நின்று...
என்னை செயலற்றவனாக் சிந்திக்கவைக்கின்றது ......ம்....... 

ஆணுக்கு ஆணாகும்... பெண்ணுக்குப் பெண்ணாகும் 
என் கண்ணுக்குக் கண்ணாகும்... 
என்று சொல்லிச் சொல்லி ஊட்டி வளர்த்தார் 
உன்னை நம் தந்தை... 

இன்றோ சிறகு முளைத்து விட்டது 
வாழ்க்கை யென்னும் வண்ணப்பூந்தோட்டத்தில் 
வட்டமிடச்செல்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி 
பன்னீரால் பாதபூஜை செய்து விடை பெற்றுவிட்டாய். 

நீ இட்டதுதான் கட்டளை, 
வைத்ததுதான் சட்டம் , 
அதை வடிவமாக்க வேண்டியதுதான் கடமை என்ற 
உன் அதிகாரத்திற்கு அடிமைப்பட்டுக்கிடந்தது நம் அரண்மனை. 

அங்கே அமைச்சனாக இருக்கவேண்டிய 
நான் அதிகாரமற்றவனாகவே வாழ்ந்து விட்டேன். 
இன்றோ வாழ்க்கையென்னும் போர்களத்தில் 
கணவனென்னும் தலைவனுக்கு சாரதியாய்....கேடயமாய்...
செல்லப்போகும் உனக்கு அறிவுரைகள் கூறவேண்டியது 
இந்த அமைச்சனுடைய கடமை என்றுணர்ந்து...
என் இதயத்தை வண்ணமலர் 
வாழ்த்தாக்கிக் கொண்டு வந்தேன் ..........

புகுந்த வீ ட்டின் சிறப்புகளையே பேசு.
அது பிறந்த வீ ட்டின் பெருமையை தானாக கொண்டு வரும், 
நம்மை கொத்திக்குதற வட்டமிடும் வல்லூறு 
பொங்கி வரும் கோபம்..... ஆக அது பொல்லாதது, 

எது வாயினும் சரி 
அது ஏற்றதாழ்வாயினும் சரி 
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,
பொங்குமாங்கடலினும் பெரிது பொருமை 
அது வாழ்வைப் புனிதமாக்குகின்றது, 

சீறிவரும் அனலைப் புனல்கொண்டு தனிக்கலாம்...

பொங்கிவரும் புனலை எதுகொண்டு தடுக்கலாம் ?!!
அக்காட்டாற்றுப் புனல் போலாம் பொறாமையும்..
பொருப்பின்மையும்.., துள்ளி வரும் சூறைக்காற்றாம் 
பகட்டும்...படோடோபமும்.., 

பெண்புத்தி பின்புத்தி நீ சிறிதாக நினைப்பதுதான்.....
ஒரு சிலருக்குப் பெரிதாகத் தெரியும் , 
உன் கை கொண்டு உன் கண்ணை நீயே 
குத்திக்கொள்ள ஆசைப்பட்டால் பிறர் மேல் 
கோள் சொல்லும் கொடிய பழக்கத்தை நீ ஏற்றுக்கொள்ளலாம்,

 எதற்கும் அறிவுரை கூறவேண்டியது 
மனைவியின் பொருப்பு, ஆனால் 
முடிவெடுக்கவேண்டியது கணவனின் கடமை...
முடிவான பின் அது தவறாயினும் !!! சரியே 
அதை தட்டிக்கழிப்பதும், வெட்டிப்பேசுவதும் பெண்ணுக்கு அழகல்ல, 

ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம், 
வண்ண வண்ண பட்டாடையும் 
வயிரம்பதித்த பொன்னகையும் 
அணிந்து அழகு பார்பதுமட்டும் வாழ்க்கையல்ல... 

நாங்கள் பூட்டிவிட்ட பொன்னகையின் எடை 
பத்தென்பது பாவையுனக்கு குறையெனப்படலாம் 
ஆனால் உன் ஒளிமயமான வாழ்க்கையின் 
இன்பத்தில்தான் எங்கள் இதயம் நிறைந்திருக்கின்றது...

வந்ததையும்..,வாழ்ந்ததையும்.., 

வரும் வாழ்க்கையையும்.., எண்ணிப்பார் ,!!!
 காலத்தின் கரங்களிலே நாமெல்லாம் அலைகடல் 
துரும்பென்ற சூழ்நிலையில் நின்று சிந்தித்துப்பார்,!! 

அப்பொழுது தெரியும் இரத்தத்தில் 
கலந்த இந்த உறவும்..
சித்தத்தில் பிறந்த அன்பும்,
இதயத்தின் பாசமும், 
ஆயிரமாயிரம் பொன்னுக்குச்சமம் என்பது ...

மாப்பிள்ளை நல்லவர்...வல்லவர்.. 

பொருப்பிற்க்கும், பொருமைக்கும் சிகரம், 
அந்த சிகரத்தின் உச்சியிலே பதிக்கப்பட்ட மாணிக்கம்தான் 
எங்கள் வானத்து வெண்நிலவு...

குடும்பம் ஒரு கோவில் ,

கொண்டவனே தெய்வம் என்ற நினைவோடு, 
தமிழ்த்தாய் வழிவந்த நாணமும், மானமும், நால்வகைப்பன்புமே ... 
சீராகவும் அள்ளிச்செல்லும் பாவையே !!!? 

இன்னும் ...இன்னும் எண்ணற்ற 
கோடி எழுதவேண்டும் 
என இதயம் துடித்தாலும், 
மன ஆழத்தில் என்னங்கள் புதையுண்டு கிடந்தாலும் 
ஏட்டிலே இடமில்லாத காரணத்தினால்........... 

பல்லாண்டு...பல்லாண்டு... 
யுகயுகமாய்... வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் ..
அன்பிற்கும் பாசத்திற்க்கும் அடிமையான .....கு.சண்முகம்

25 comments:

perumal karur said...

அருமைங்க

அப்படியே புல்லரிச்சு போச்சு

perumal karur said...

உங்கள் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுமாறு ஒரு ஆப்சனை உங்கள் வலை பூவில் ஏற்ப்படுத்தி வைத்திருந்தீர்களே யானால் எனது மின்னஞ்சல் முகவரியை பதிந்து வைத்துக் கொள்வேன்

பதிவுகள் எனக்கு மின்னஞ்சலில் கிடைக்கும்

செய்வீர்களா?

Unknown said...

அன்பு நண்பருக்கு ....
பாராட்டுக்கள் எம் தந்தையே சேரும்...

Unknown said...

அந்த ஆப்சன் எங்க இருக்குனு
கண்டுபுடிக்கறேன்.....

perumal karur said...

தெரியும் .. நண்பரே :-)

உங்கள் அத்தைக்கு உங்கள் அப்பா வரைந்த மடல் தானே அது ?

perumal karur said...

C B I வெச்சு கண்டு பிடிங்க

எனக்கு அந்த ஆப்சன் பத்தி தெரியாது ..இல்லைன்னா நானே சொல்லிடுவேன்

Unknown said...

ஆமாம் நண்பரே....
கருத்திட்டமைக்கு நன்றிகள் பல...

கண்டுபுடிக்கறேன்... கண்டுபுடிக்கிறேன்

Unknown said...

உங்கள் அத்தைக்கு உங்கள் அப்பா வரைந்த மடல் தானே அது ?

ஆமாம் நண்பரே....

rajamelaiyur said...

அருமை.. அருமை,

rajamelaiyur said...

வந்தேமாதரம் அல்லது பிளாக்கர் நண்பன் பிளாக்கில் தேடுங்கள் நீங்கள் விரும்பிய இ-மெயில் ஆப்ஷன் கிடைகும்.

rajamelaiyur said...

நேரம் இருந்தால் www.kingraja.co.nr பிளாக் பக்கம் வரவும்.

Unknown said...

மிக்க நன்றி ....
ராஜா
ஆலோசனைக்கும்... கருத்திட்டமைக்கும்.
கட்டாயம் பார்க்கிறேன்.........

Unknown said...

அட்டகாசம்

Unknown said...

என்னங்க இது பயபடுத்தறீங்க....
திவாகர் நாய்.....
...
...
ஏம்ப்பா...
..
..
..
என்னோட பதிவு எல்லாம்
சரியாத்தானே இருக்கு

Unknown said...

ரொம்ப அருமைங்க...

சரியாதான் இருக்கு

Unknown said...

இன்னுமா அந்த ஆப்சன் வைக்கல?

x-( x-( x-( x-( x-(

perumal karur said...

சார் அந்த ஆப்சன சீக்கிரம் வெச்சிடுங்க ....

இல்லனா இந்த நாய் கடிச்சுடும் போலிருக்கு ...

Unknown said...

முடியல......
சி பி ஐ ல.... எல்லோரும் பிஸியாம்...


perumal karur said...

எனக்கென்னமோ உங்கள திவாகர் நாய் கடிக்க போகுது.. தொப்புள சுத்தி ஊசி போட போறாங்க...

Unknown said...

எனக்கு ஏற்கனவே ஊசி போட்டிருக்கு

நான் கடிச்சா விசம் ஏறாது

Unknown said...

அப்போ
கடிப்பேன்னு வேற சொல்லுவய்யா?
...
..
திவாகர் நாய்
பாசமுள்ள நாய்
பெருமாள்......

perumal karur said...

நன்றியுள்ள நாயாகவும் அது இருக்கலாம்

Unknown said...

நாம போடுற மரண மொக்கைல ராஜபாட்டை ராஜா சார் கமெண்ட் ட அன்சப்ஸ்க்ரைப்சன் பண்ண போறாரு.

அதுக்குள்ள வேற ஒரு பதிவு போடுங்க அந்த பதிவுல மொக்கை போடலாம் :-)

ஆமாங்க பெருமாள் நான் நன்றியுள்ளவன் தான். :-)

stanley said...

நல்லா இருக்கு...பொறுமை இல்லை இப்ப வாசிக்க அப்புறம் வாசிக்கிரேன்

Unknown said...

அப்பறமா வந்து தவில் வாசிங்க கேட்கணும் :-)