Tuesday, December 18, 2012

கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா வின் கதைகளில் ஒன்று (18+)

"இப்ப நா ஒரு கதெ சொல்றேன்" என்று ஆரம்பித்தார். கதை சொல்லி தாத்தா!

ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான் கிட்டான் என்ற `விடலை`

" ஒரு காட்லெ நூறு கழுதைக இருந்துச்சு, அதுல தொன்னுத்தி ஒம்பது கழுதைக ஆம்பிளைக் கழுதைக. ஒரே ஒரு கழுதை மட்டும் பொட்டைக் கழுதை."
  அந்த நாயி,பூனை,கழுதைக இதுக்கெல்லாம் ஒரு 'சீசன்' உண்டு. அந்தச்  சீசன்(காலம்) வந்துட்டதுன்ன பாவம், இந்த ஒரே ஒரு போட்டிக் கழுதை தொன்னுத்தி ஒம்பது கழுதைகளுக்கும் ஜவாப் தரமுடியாம ரொம்பதான் அல்லடிப்போகும். அய்யோ அய்யோ என்று கதறும்; இந்த கதறல் காடெல்லாம் எதிரொலிக்கும்.

 இதுக்கு மத்தியில், இந்த பொட்டக் கழுதையை அடைய ஆம்பிளை கழுதைக்குள்ள பயங்கர சண்டை நடக்கும். பலசாலிகள் இப்படி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறப்ப நோஞ்சான் பூஞ்சான் கழுதைக பூந்து வெளையாடும்! உடனே பலசாளிக் கழுதைகள் ரண்டு ஓடிவந்து  இந்த நோஞ்சான் பூஞ்சானை நாலு உதை கொடுக்கும். இதுகள் வலி பொறுக்க முடியாமல் காள் காள்ன்னு கத்தும். கத்திக்கொண்டே, நாங்கள்ளாம் கழுதைகள்  இல்லையா; நீங்க தாம் கழுதைகளா; எங்களுக்கும்  ஆசை இராதா என்று ஞாயம் பேசும்.

என்ன பேசி என்ன செய்ய; பலசாளிகள்ட்டெய்யும்  முரடங்க கிட்டெயும் ஞாயம் எடுபடுமா?

இப்படியாக காடே ஒரு தூசிக்கோட்டையா ஆயிக்கிட்டுருக்கு.

இந்த 'ரணகளத்த' மரத்து மேலே இருந்த ஒரு கரிச்சான் பறவை பார்த்துகிட்டே இருந்தது. அந்த போட்டிக் கழுதெ படுற பாதறவைப் பார்க்கச் சகிக்கலெ. 'என்ன அநியாயம், கொஞ்சம் ஈவு இறக்கம் வேண்டாமா? தொன்னுத்திவொம்பது கழுதகளோட ரோதனைய ஒரு போட்ட கழுத தாங்குமா என்கிற ஞாயம் கொஞ்சம் கூட தெரியலயெ இந்த மட கழுதைகளுக்கு. விருதாத் தடி கழுதைகளா வந்து சேந்துச்சுன்னு, அந்த கரிச்சானுக்கு ரொம்ப வருத்தாமே போச்சி.

 ஆனாலும் நாம என்ன செய்ய முடியும்ன்னு யோசிசிச்சுகிட்டே அதுக பக்கத்துல வந்தது. கரிச்சானை பார்த்ததும் பொட்ட கழுதெ ஒன்னு அழுதது; இந்த வங்கொடுமெ உண்டுமா தங்கச்சின்னுட்டு.

சுத்தி நின்ன உலக்கை கழுதைகளையெல்லாம் , தூரப் போங்க, தூரப் போங்கன்னுட்டுக்  கீச்சுக் குரல்ல கரிச்சான் கத்திச்சு. "நான் சொல்றத கேக்கீளா கொஞ்சம்ன்னுட்டு  கேட்டது. சரீன்னு ஒப்புக் கொண்டது கழுதகேயெல்லாம்.

பொட்டை கழுதையோட முதுகுல உக்காந்துகிட்டு அதுகளோட விவகாரத்தை கேட்டது.

ஒரு பெரிய கழுதை ஞாயம் சொன்னது கரிச்சானிடம், "இந்த பாரு கரிச்சானு;
 நான் சொல்றத நல்ல கேட்டுக்க; பிறகு ஆ...ஊ...ங்கப்படாது. நாங்க உங்க குருவிக மாதிரியில்லெ; நெனைக்கிற போதெல்லாம் தெனேமும் 'இருந்து'கிட்டுருக்க. எங்களுக்கு ஏற்பட்டது வருஷத்துக்கு ஒருக்கதான்.  அதும் குறிப்பிட்ட ஒரு மாசம் தான். அதுக்குள்ளார நாங்க செஞ்சு முடிச்சுறனும். இப்போ விட்டச்சின்னா அடுத்த வருஷந்தான்; நல்ல கேட்டுக்கோ கரிச்சனோவ்'" என்றது.

 அதுக்கு கரிச்சான், "அது சரிதான் பெரியாளு; நீ சொல்றதெல்லாஞ் சரிதான். அந்த பொட்டே ஒத்தப்பேரியா இருந்துகிட்டு உங்க இத்தன பேருக்கும் ஜவாப் தரமுடியுமா? ஒரு நெல்லக் குத்துறதுக்கு நூறு உலக்கை இறங்குனா நெல்லுதான் தாங்குமா?" என்று கேட்டதும் ஒரு பெரிய்ய முரட்டுக் கழுதைக்கு கோவம் வந்துவிட்டது.

"நீ  என்ன ஞாயம் பேசுறே; போ ஒஞ்சோலியப் பாத்து. நாங்கலாச்சி எங்க காரியமாச்சி" என்று சொல்லி, முதல்ல விலகிக்கொ என்று கால்களை தூக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.

முதுகில் இருந்த கரிச்சான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தது. மொரட்டு கழுதெ கேக்குறாப்ல இல்ல. என்ன செயறதுன்னுட்டு கரிச்சானுக்கு தெரியல.

கரிச்சானுக்கு தடுத்து நிறுத்த ஒரு வழி தான் தெரிஞ்சது. முதுகில் இருந்த  கரிச்சான் பொட்டக் கழுதையின் "அறை"யை தன் உடம்பால் பொத்தி மறைத்துக் கொண்டது.

மொரட்டுக் கழுதை அதை ஒன்னும் கவனிக்கல. அதுபாட்டுக்கு ஏறி இறங்கிட்டது. கரிச்சானை பார்த்தா காணோம்! எங்க போச்சி? என்று தெரியாமல் கேட்டான் கிட்டான்.

கிட்டான் முகத்தை பார்த்தார் தத்தா.

தாத்தா சொன்னார்.

கரிச்சான் எங்கேயும் போகல. பொட்டக் கழுதையோட கருப்பைக்குல்லாற போயிட்டது! என்றார்.

"சர்வ மூடர்களின் மத்தியில் நீதியை எடுத்துச் சொல்லியதோடு மட்டுமில்லாமல் அதை நிலைநாட்ட முயல்கிறவர்களுக்கு இப்படி தான் இழிவான சாவு கிடைக்கும்" என்றார் தாத்தா.
''வயது வந்தவர்களுக்கு மட்டும்`` என்ற கி.ரா வின் கதை தொகுப்பிலிருந்து....... 

5 comments:

perumal karur said...

NICE........

Anonymous said...

சூப்பர் சரவணன்..........
இந்த கதையையோ அல்லது கதையின் நீதீயோ யாரிடமும் நேரில் சொல்லவோ
கேட்கவோ மிகவும் சங்கடமாகயிருக்கும்...
ஆனால் நேரில் கேட்பதை போலவே அழகாக எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்....
அன்புடன்..... பிரியதர்ஷினி

Unknown said...

நேற்றே சொல்லனும் என்று இருந்தேன் மறந்து விட்டது..

இது மறைவாய் சொன்ன கதைகள் அப்படிங்கற தொகுப்பில் இருந்த கதை தானே??

இந்த மாதிரி கதைகள் போடும் பொழுது அது எந்த தொகுப்பில் இருந்து எடுத்தது என்று போட்டீர்களேயானால் வாசகர்கள் அந்த தொகுப்பை வாங்கி படிக்க ஏதுவாக இருக்கும் .

செய்வீர்களா அண்ணா??

Unknown said...

மன்னிக்கவும் ...
தவறுக்கு.............
நான் படிக்கும் காலத்தில் படித்த கதை...
பாராட்டுக்கள்
எழுத்தாளர் கி.ரா.வையே சாரும்....
பிரியதர்ஷினி.............
...
...
தவறை சுட்டி காட்டிய
கரூர் பெருமாளுக்கு நன்றி....
....
செய்து விட்டேன் நாய் தம்பி....

Unknown said...

அப்படியே ஈ மெயில் சப்ஷ்க்ரிப்சன் ஆப்சனையும் தேடி கண்டுபிடித்து வலைப்பூவில் இணையுங்கள் அண்ணா!!