Tuesday, August 9, 2016

கேளுங்கள் ... கொடுக்கபடும் ...

”இலஞ்சமில்லா திருப்பூர்”.. வெற்றி சரித்திரம்...

கடந்த 30.07.16 அன்று, திருப்பூரில், 
நேர்மை மக்கள் இயக்கம் சார்பில், சகாயம் ஐ ஏ எஸ் அவர்களால்
"லஞ்சம் இல்லா திருப்பூர்" பரப்புரை தொடங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர் R Anandan அவர்கள்
என்னிடம் தயக்கமாக மின் துறை சம்பந்தமான ஒரு 
பிரச்சனையை பற்றி சொன்னார். (நமக்கு அல்வாவாச்சே)
திருப்பூர் ஆண்டிபாளையம் மின் பிரிவு அலுவலகத்தில்
புது இணைப்பு வாங்க முறையாக பணம் கட்டி ரசீது 
வாங்கியாச்சு.. ஒரு மாசம் கழிச்சு வாங்கனு அலுவலர்கள் சொல்லியிருக்காங்க... . 
ஆனால் அங்கிருந்த “அன்பு” என்ற
அன்பே இல்லாத ஊழியர் “என்னை முறைப்படி கவனிச்சா
தான் உனக்கு லைன் வரும் ... இல்லைனா கரண்டே கிடைக்காம செஞ்சுருவேனு”
மிரட்டியிருக்கிறார்....
( அன்பு செல்வனின் அலைபேசி எண் 9842690890 )
நமக்காக நம் காசில் சம்பளம் வாங்கி வேலை செய்யும்
நம்ம வேலைக்காரன் ... நம்மை மிரட்டுவதா ... 
என்ன ஆனாலும் சரிங்க .... 
கரண்ட்டே கிடைக்காட்டியும் பரவாயில்லை...
 எதனாச்சும் செய்யுங்கனு..... 
நண்பர் ஆனந்தன் சொல்ல....

நமக்கேன் வம்பு .... இனி
எதிலும் ஒதுங்கி இருக்கலாம்... என நினைத்திருந்த
குரங்கு மனம் விழித்து கொண்டு.....
சின்ன கல்லை போடலாமுன்னு .... 
மின் மாவட்ட கண்காணிப்பாளருக்கு ஒரே ஒரு ...
மின்னஞ்சல் மட்டுமே தட்டிவிட்டேன்....
(setrpr@tnebnet.org )
ஒரு மாசம் கழித்து வரவேண்டிய மீட்டர்....
ஜீம்பூம்ம்பா.... போட்ட மாதரி....
இரு நாட்களில் மீட்டர் வந்து விட்டது ....னு சொல்லி
லைன் கொடுத்துட்டு சினேகமாக சிரித்துவிட்டு சென்றனர்...
மின் துறை ஊழியர்கள்....
தட்டுங்கள் ... திறக்கபடும்...
மெயிலை ... தட்டுங்கள்... லைன் கிடைக்கும்...
கேளுங்கள் ... கொடுக்கபடும் ...
லஞ்சமல்ல.... பில் தொகை மட்டுமே...

Tuesday, January 26, 2016

கேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....

புதிய எரிவாயு உருளை வாங்க  விசாரித்தேன் ..
திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்...

பகல் கொள்ளையாக இருந்தது.....
அடுப்பு கட்டாயம் வாங்கனுமாம்....
இரண்டு சிலிண்டர் வேணுமுன்னா ..
ஏதாவது பொருள் வாங்கனுமாம்....
கிட்டதட்ட எட்டாயிரம் ரூபாயாம்....

யோசித்தேன் ...
இருக்கவே இருக்கு ...
கூகுள் ஆண்டவர் தேடினேன்..கிடைத்தது....

ஆன்லைன் மூலம் பணம் கட்டி
எரிவாயு உருளை இணைப்புக்கு விண்ணப்பித்தேன்..

பணம் செலுத்த ...இணைப்பு வாங்க...
நேரில் போகவே இல்லை ...

அலுவலகமே அல்லோல பட்டு ...
அலை பேசியது... ... இது என்ன முறை ...
எங்களுக்கே தெரியலை..னு கதறியது...

எனக்கொன்றும் அவசரமில்லை ...
முறை தெரிந்து .... வழி கண்டு ..... பின்பு வாருங்கள்...
என்று கூலாக சொன்னேன்... அலைபேசியில்...

ஏழாவது நாளில் ...
இரண்டு உருளையுடன் அடுப்பு தவிர
அனைத்து உபகரணங்களும் வீடு தேடி வந்தது...
மொத்த செலவு - ரூ.3570 மட்டுமே....
...
ஒரு மாதம் ஆகிருச்சு....
எரிவாயு மறு உபயோகத்திற்கும்
இணைய வழியில் பதிந்தேன்...
நம்மை பற்றி தெரிந்து கொண்ட இணையம்
”இப்போதே பணம் கட்டுகிறாயா”னு கேட்டுச்சு...

ஆஹா ...
அருமை என உடனே பணம் கட்டினேன்...

எந்தவிதமான பேரமும் பேசமால்...
0.00 என்ற  பில் தொகையுடன்....
இரண்டே நாளில் எரிவாயு உருளை வந்தது...

”அண்ணே....நீங்க தான் இந்த முறைப்படி பர்ஸ்ட் கஸ்டமர்”
என சிரித்தமுகத்துடன் எரிவாயு உருளை
விநியோகித்து சென்றார்... முகவரின் ஊழியர்...


மாற்று எரிவாயு உருளை பெற

- புதிய இணைப்பு பெற..