Wednesday, October 24, 2012

புதியவீடும் மின் இணைப்பும்

‎21 ஆகஸ்ட் 2006....

திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் 
எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை 
மட்டுமே பேசிக்கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ 
ஆண்டுக்கொரு முறையோ வீதிவீதியாக அலைந்து வாடகைக்கு 
வீடு புடிச்சு சட்டி பானை தூக்கி கொண்டு 
தட்டு முட்டு சாமான்களை வண்டியில ஏத்தி
புது வீட்டுக்கு கொண்டு போய் சேத்தி அப்பப்பா ........ 
எங்க குடும்பத்துல நாங்க அண்ணன் தம்பி ஐந்து பேரோடு 
மொத்தம் பத்து பேர் கூட்டுக்குடும்பம்.... 
இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் தான் இந்த நாள்.......... 

திருப்பூர் மாநகருக்கு அருகில் தொங்குட்டிபாளையத்தில் 
யார் செய்த புண்ணியமோ ஒரு ஏக்கர் நிலம் வாங்கி 
பூமி பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தோம் ...... 
பாண்டவர் பூமி போல.............

வீடு கட்டும் பணியை விருப்பமுடன் நான் ஏற்றேன்..... 
(மேற்பார்வை என்ற பெயரில் பொழுதை போக்கத்தான்)

வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டுமே ...... 
திருப்பூர் தாராபுரம் சாலை பொல்லிகாளிபாளையம்
மின்சார அலுவலகத்தில் கேட்ட போது
வீட்டு வரி ரசீது வேணுமுன்னாங்க....... 
(அஸ்திவாரமே முடியல)
ஒன்பதாம் வகுப்பு படிச்ச மூளை வேலை செய்தது..... 
மின்சார சட்டங்களை தேடி படிச்சு ....
வீடு கட்ட தற்காலிக இணைப்புக்கு 50ரூபா கட்டி விண்ணப்பித்தேன்...

அலுவலகத்தில் என்னையும் என் மனுவையும் தவிர்க்கவே பார்த்தார்கள். விடுவேனா கஜினி போல படையெடுத்தேன்.... ஒருவழியாக சைட் விசிட் என வந்தார்கள்.... நான்கு கம்பம் போடனும் நார்மலா ஒரு கம்பத்துக்கு 8000 வரும் நீங்க 24000 குடுங்க போதும் என்றார்கள்...
நானாவது காசாவதுன்னு மனசுக்குள் நினைச்சுகிட்டு சரி சார் என அப்போதைக்கு அவர்களை அனுப்பி வைத்தேன்... 

இதே பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகங்களுக்கு உட்பட்ட அள்ளாலபுரம், அக்கனம்பாளையம் வடுகபாளையம் போன்ற 
சின்ன சின்ன ஊர்களில் பயன்படாமல் புது புது கம்பங்கள் சும்ம 
கிடைந்ததை போட்டோ எடுத்துக்கொண்டேன்.... 

தகவல் உரிமை சட்டம் பிரபல்யம் ஆகாத கால கட்டம் அது...
திருப்பூர் குமார்நகர் தலைமை மின் அலுவலகத்தில் நேரடியாக 
சில கேள்விகள் கேட்டு மனு கொடுத்தேன்.... 
அப்போது 50ரூபாய்க்கு செலான் எடுக்கனும்.... 

என்னை அமர வைத்து உடனே சம்பந்தபட்டவர்களை 
போனில் காய்ச்சி எடுத்து என் மனுவையும் 50ரூபா 
செலானையும் திருப்பி கொடுத்து அனுப்பி வைத்தார் 
அந்த அதிகாரி. பெயர் மறந்துவிட்டது.... 

என்னை எங்கள் வீடு அமையும் இடத்திற்கு அருகில் உள்ள 
சின்ன சாலை பஞ்சாயத்தை சேர்ந்தது என விஏஓ விடம் சான்று
மட்டும் வாங்கி தாருங்கள் என்றார்.

விஏஓ வா......... அய்யய்யோ..... அப்போழுது தான் 
மணியகார அம்மாவுக்கும் எனக்கும் பட்டா வாங்கரதுல
சண்டை வந்து 3000 ரூபா கேட்டு தாசில்தாரர் வரைக்கும் 
புகார் பண்ணி பைசா செலவில்லாமல் எங்கும் அலையாமல்
பட்டா வங்கியிருந்தேன் மேற்படி இடத்திற்கு.... 

என்னதான் நடக்கும் பார்க்கலாம் என மணியகாரம்மா 
செல்வி என்ற 50ஐ கடந்த காசு பைய்த்தியத்தின் 
அலுவலகத்திற்கு வந்தேன்..... 2006 உள்ளாட்சி தேர்தல் 
சமயம் அது......... உள்ளே 15க்கும் மேற்பட்டோர் பல 
காரணங்களுக்காக காத்திருந்தனர்.... 

என்னை பார்த்ததும் இருக்கையிலிருந்து எழுந்து ஓடோடி வந்து 
கடைசியாக வந்த என்னை மேலதிகாரியை போல மதிப்பு கொடுத்து 
எனக்கான சான்றை வழங்கினார்.... 

அதற்கு வேலையே இல்லாமல் போயிருச்சு...........
காரணம் எங்கள் வீட்டிற்கு அருகில் எங்கெங்கே மின்கம்பம்
போடனுமோ அங்கெல்லாம் குழி தோண்டி கொண்டிருந்தார்கள்..... 

வீடு அஸ்திவாரம் முடிந்து இப்போதுதான் சுவர் எழும்ப 
ஆரம்பித்திருந்தது.............ஒரே நாளில் கம்பம் போட்டு அடுத்த நாள்
லைன் கொடுக்க வந்தார்கள் .... நாங்கள் ஒயரிங் ஆரம்பிக்கவில்லையே.............

45 வயது மதிக்கதக்கவர் என்னை 
”அண்ணா லைன் வந்துருச்சுன்னு இந்த விண்ணப்பத்தில 
கையெழுத்து போட்டு கொடுங்க.நீங்க எப்போ எந்த நேரத்துல 
ஒயரிங் பண்ணினாலும் போன் போடுங்க. 20நிமிசத்துல வந்து 
கனெக்‌ஷன் கொடுத்திடறேன்ன்னு சொல்லி என் வேலைய காப்பாத்துங்கன்னு பரிதாபமாக கேட்டார். கையெழுத்து
போட்டுக் கொடுத்தேன்......... 20 நாள் கழிச்சு ஒயரிங் முடிச்சு
விளக்கு எரிஞ்சுது...... கட்டி முடிக்காத எங்க வீட்டில்.... 

இது தான் எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வந்த கதை...... 
இன்று வரை எங்க வீட்டுல கம்பத்துல பீஸ் போயிருச்சுனா 
போன் பண்ணினா போதும்.... 10ரூபா கூட வாங்க மாட்டாங்க.....

பொறுமையா படிச்சதுக்கு நன்றி....
இந்த பதிவு விழிப்புனர்வுக்காகவே பதிந்தேன்...
என் சுய தம்பட்டமாக நினைக்காதீர்......நன்றி....

நண்பர் வீட்டுக்கு மின்இணைப்பு வந்த கதை.....
இன்ப `ஷாக்`அடித்த கரண்ட்

18 comments:

Unknown said...

சரவணா பிரகாஷ், கலக்கிட்டிங்க போங்க... வாழ்த்துக்கள்!

பின்னூட்டத்தில் வோர்ட் சரிப்பார்த்தல் enable உள்ளது, disable செய்யுங்கள்.

அனைவரும் பின்னூட்டம் செய்ய வசதியாக இருக்கும்.

-------
அமர்க்களம் கருத்துக்களம்
www.amarkkalam.net

Unknown said...

நன்றி.............

Unknown said...

சரியா .............
ஒன்பதாம் வகுப்பு மூளைக்கு
ஒன்னுமே புரியல........
அதனாலதான் 2008ல ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் ஒன்னுமே பதியல............
நன்றி..... அமர்க்களம் கருத்துக்களம்

Unknown said...

ம்.. இப்ப சரிதான். தொடர்ந்து எழுதுங்கள்...
அனுபவம்தான் வாழ்க்கை.. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு பழமொழி கேட்டதில்லையா?

Unknown said...

ம்.. இப்ப சரிதான். தொடர்ந்து எழுதுங்கள்...
அனுபவம்தான் வாழ்க்கை.. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு பழமொழி கேட்டதில்லையா?

Anonymous said...

suppar

Unknown said...

நன்றி.......

பாவா ஷரீப் said...

hi super man
really superman

மலரின் நினைவுகள் said...

இன்னைக்கு வராத கரன்ட்டுக்கு அன்னைக்கி அம்புட்டு கஷ்ட்டப்பட்டு இருக்கீங்க...!!
பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஹா ஹா
நன்றி........ பாவா ஷரீப்
நன்றி.........மலரின் நினைவுகள்

stanleyabrahamgp@gmail.com said...

இதே மாதிரி போடுங்க....ரொம்ப சிரிப்பா இருக்கு...ஆனால் விழிப்புனர்வாவும் இருக்கு...
எழுத்து நடை மிக நன்று....
அந்த அங்கங்கே பன்ச்சூ நக்கல் பன்சு வச்சு...நீங்க ஆப்பு அடிக்கனும்ன்னு நினைக்குறப்போ அஅந்த வியேஓ கொடுத்த மரியாதை....அது தான் கதையின் டுவிஸ்டு,..நன்று

Unknown said...

Super Super Super

Unknown said...

Super Super

Unknown said...

நன்றி....
ஸ்டேலியன்
&
ராஜ் முத்து குமார்

Unknown said...

இன்றுதான் பார்த்தேன்
உங்கள் அனுகுமுறையை கடைபிடித்தாலே லஞ்சத்தை ஒழிக்கலாம் போல.......
நன்றி .

Unknown said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...

Unknown said...

அருமை...