Friday, June 13, 2014

சரவணனின் ஆட்டோகிரேப்......

மைதிலி என்னை காதலி என்று 
விவரம் இல்லா வயதில் விளையாடி திரிந்தவளோ 
இன்று விண்ணை தொடும் மாளிகையில் 
சிங்கார சிங்கப்பூரில் வாழ்கிறாள் ...

தனலட்சுமி போல தரணியில் இவளுடன் வாழலாம் என
மனகோட்டையில் மண் வீடுகட்டி வளர்ந்தவளோ
தலைநகர் சென்னைக்கு வாக்கபட்டு செழுமையாக வாழ்கிறாள்...

எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும் என 
கனிவுடன் கற்று கொடுத்து அக்கறையாக
அன்பு செழுத்திய கெளரியோ சாப்ட்வேர் இன்சினியர் ஆகி
ஐதாராபாத்தில் அவள் கணவனோடு காலந்தள்ளுகிறாள்...

கட்டிக்கட்டு புள்ளகுட்டி பெத்துக்கிட்டு வாழலாமுன்ன சுதாவை
பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து
கொசுவம் கட்டிகிட்டு ஆட்டுகுட்டி மேச்சுகிட்டு பொலப்பை
ஓட்டிகிட்டு இருக்கிறாள்......

பள்ளி விட்டதும் பறந்து வந்து பார்த்தால்தான்
பதைபதைக்கும் மனசு பண்படுதுன்னு சொன்ன
சாந்தியோ சகலமும் மறந்து கேண்டீன்காரனை கட்டி
கேட்பாரின்றி சாந்தியிழந்து தாய் வீட்டில்....

பேரிட்சை பழம் போல பெரிய உதட்டுக்காரி
சாவகாசமாய் சிறைபடுத்திய சந்தியா...
கொங்கு மண்ணில் கோலாகலமாக வாழ்கிறாள்

இன்னும் இன்னும்.....
வசதியை மட்டுமே பார்த்த வசந்தி,
தேடி வந்த தேவதை தேவி,
அருமையான காதலி அருணா,
அன்பான அமுதா,
சொல்லி கொடுத்த வாசவி,
மறக்க முடியாத சங்கீதா...
வியாக்கியனமான வித்யா....
ஜெயா..
உங்களின் ஞாபகங்கள் என்றும் என்றென்றும் பசுமை மாறாமல்
நீக்கமற நிறைந்திருக்கும் என் நெஞ்சத்தில்....
அன்புடன்....சரவணபிரகாஷ்...

பிறந்தநாள் வாழ்த்து

சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியை புகழ்ந்தும்

அண்டங் காக்கா , காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியும்

நடிகன் , காத்தாடி , கிழவன் , மலையாளி , அட்டைக் கத்தி , கோமாளி , ஊமையன் , அலி என்றெல்லாம் மக்கள் திலகத்தை பெருமை படுத்தியும் 

காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில்கோளாறு என்று புகழ்ந்தும்

ஐஸ்ப்ரூட் சம்பத் , வாழப்பாடி ஒரு வழிப்போக்கன் , செவிடன் ஜீவானந்தன் , நொண்டி பா. ராமமூர்த்தி , கக்கன் என்ன கொக்கா ? என்றெல்லாம் பேசியும்

குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி , கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன் , குரங்கன் பக்தவத்சலம் , துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன் , ஈனப் பிறவி இரா. செழியன் , சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன் ஈ எறும்பு , கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா சிதம்பரம் .

பண்டாரம் , பரதேசி , கமண்டலம் , காவி உடை , ஆக்டோபஸ் ஜந்துக்கள் , கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள் , இல கணேசன்கள்

ராஜீவ் போல நான் ஒன்றும் வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவையும்

காந்தாரி , கவுதாரி , சூர்பனகை , காதறுந்த காலி , மூக்கறுந்த மூளி பால்கனி பாவை , தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது , என்றெல்லாம் இன்றைய முதல்வரை கவி பாடியும்

துரு பிடித்த வாள் , குளத்தை விட்டு ஓடிய மீன் , கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவை கொண்டாடியும்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல புதிய புனைப்பெயர்களை வழங்கிய
தமிழ்த்தாயின் தலைமகன் என சொல்லி கொள்ளும்
மூவுலகத் தமிழர்களின் பாசத்தலைவனுக்கு
“பிறந்தநாள் வாழ்த்துகள்”.......