Sunday, January 25, 2015

அரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..

நேற்று மாலை
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில்
திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள
அலுவலகத்திற்கு சென்றேன்...

அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு...
.திருமணகட்டணம் ரூ.1000 கேட்டார் ...
கொழு பொம்மை போல் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர்.

சில நாட்களுக்கு முன்பு சிவன்மலை கோவிலில்
நடந்த உறவினர் திருமணத்திற்கே
திருமண கட்டணம் ரூ.250 தான் கொடுத்திருந்தது
நினைவிற்கு வர.... சிவன்மலையில் நடந்த கதையை படிக்க...

நான் திருமணகட்டணம் குறைவாகத்தானே இருந்தது எனக்கேட்க..
அப்படியெல்லாம் இல்லை ரூ 1000 கட்டினால் கட்டுங்கள்
இல்லைனா நடையை கட்டுங்கள்” என்றார்

என்னுடைய இயல்புக்கு மாறாக சாந்தமாக....
இவர்கள் வசதியில்லாதவர்கள்....
ஏழைகளுக்கென்று கட்டணம் குறைவாக ஏதும் உள்ளதா..
எனக்கேட்டேன்...

1000 ரூபா கூட கட்ட முடியாதவங்க
கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவாங்க ...
ஒரு பொண்ணை வச்சு எப்படி காப்பாத்துவாங்க......னு கேட்க...
என்னுள் இருந்த சாந்த மூர்த்தி  ருத்திர மூர்த்தியானார் .....

”ஒரு பொண்ணை வச்சு குடும்பம் நடத்த.....
1000 ரூபா தேவையில்லை.........(............)
ஆம்பளையா இருந்தா போதும்”
ஆனா உங்களை மாதரி பொண்ணை கட்டுன
தினம் 10000  சம்பாரிச்சாலும் பத்தாது’னு சொல்ல...
சிவப்பாக இருந்த அவரது முகம் மேலும் சிவந்தது....

அவருக்கு ஆதரவா பக்தி பழம் போலிருந்த இன்னொரு ஊழியர்
... உங்களுக்கு விருப்பமிருந்தா பணத்தை கட்டுங்க...இல்லைனா
எங்கோ போய் திருமணத்தை நடத்துங்கள்....”
“எங்கள் கோவிலுக்கு எதற்கு வருகிறீர்கள்....
நாங்களா வரச்சொன்னோம்” எனச்சொல்ல....
..
உன் அப்பன்.பாட்டன் வீட்டு...சொத்தா இந்த கோயில்....
பக்தர்கள் போடும் காணிக்கை காசில் சம்பளம் வாங்கி
வயிறு வளர்க்கும் உங்களுக்கு இவ்வளவு திமிரென்றால்
உங்களுக்கு மட்டுமல்லாமல் .....
வாசலில் இருப்பவர்களுக்கும் சேர்த்து
பிச்சை போடும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்” என்று சொல்லி
பெரிய ருத்தர தாண்டவமே ஆடிவிட்டு.......

நேராக அறநிலையத்துறை உதவி ஆணையரை
சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன்...

அந்த அலுவலக உதவியாளர்களிடம் பிரச்சனையை சொன்னதும்
உதவி ஆணையாளர் தேக்கடி முகாமுக்கு சென்றிருப்பதாகவும்
அடுத்த வாரம் வந்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்...

அடுத்த வாரம் வரை ஆறப்போட மனம் இடம் தராததால்
இருக்கவே இருக்கு நம்ம முதல்வர் தனிப்பிரிவு என ...
பைசா செலவில்லாமல் புகாரை தட்டி விட்டாச்சு....
பார்ப்போம் என்ன நடக்குமென்று....






3 comments:

TAMIL RTI HELP said...

தட்டிக் கேட்பவர்கள் குறைவாக இருப்பதால்தான் தவறுகள் தவறாமல் நடைபெறுகின்றன. ஊரோடு ஒத்துப்போ எனச் சொல்லியே நம்மை முடக்கிவிடுகிறார்கள்.

Unknown said...

மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பா

Anonymous said...

பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்களின் நன்கொடை அதிகம் பெற்றே நடைபெற்றது. அதற்கும் அரசு அனுமதி வேண்டுமே. அதற்கும் கையூட்டு பெற்றே செய்ததாக தகவல் கசிந்தது.