Thursday, January 24, 2013

இன்ப `ஷாக்` அடித்த கரண்ட்

சபாஷ் நண்பரே...
நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்...
நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்...

மணி:  அண்ணா.... மணி பேசறேன்.... (என்னை விட மூத்தவர்)  
நான் : சொல்லுங்க மணி....
மணி;  எங்க அக்கா வீடு கட்டியிருக்காங்க....
நான் ; வாழ்த்துக்கள்.......( பணம் கீது கேட்டுருவாரோ)

மணி; கரண்ட் லைன் வாங்க நேத்து ஆபிஸுக்கு போனாங்க...
நான்: சரி....( நமக்கு ஏதோ வேலை வந்துருச்சு)
மணி: ஆபிஸ்ல பணம் 2500 வாங்கியிருக்காங்க.... லைன் வர
            பத்து நாள் ஆகுமாம்... லைன் கொடுக்கும் போது
            ரூ 1000 கொடுக்கனுமாம்...அப்படியாண்ணா....?
நான்; 2500 க்கு ரசீது கொடுத்தாங்களா?
மணி:  50 ரூவாய்க்கு ஒன்னு 1550ரூவாய்க்கு ஒன்னு தந்தாய்ங்க...

(புரிந்து விட்டது..... ஒருமுனை மின் இணைப்பு வாங்க இவ்வளவுதான்....
மீதம் 900 ரூபாயும் மறுபடி 1000 ரூபாயும் அன்பளிப்பு........

ரூ 50 விண்ணப்பகட்டணம் கட்டி விண்ணப்பித்தால் ஏழு நாட்களுக்குள்
இணைப்பு கொடுத்தே ஆகவேண்டும் . இல்லையெனில் தாமதிக்கும்
ஒவ்வொரு நாளுக்கும் ரூ100 இழப்பீடு நுகர்வோருக்கு வழங்க வேண்டும்...
மீட்டர் கட்டணம் + இணைப்பு கட்டணம்=1550 மட்டுமே.......

களபணி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டுத்தான்
விண்ணப்ப கட்டணம் வாங்கி ரசீது போடுவார்கள்....)

நான் : என்ன பண்ணலாம்?
மணி: நீங்க சொல்றதை செய்யலாம்....
நான் ; அக்காவை பாத்து கேட்டுக்கங்க.... மின் துறை விஜிலென்ஸ்
             போலாம்..... மீதம் 1000 கொடுக்கும் போது புடிச்சரலாம்...
மணி: சரிங்க.....

அரை மணி நேரம் கழித்து.......

மணி; அக்கா வேண்டாமுண்ணுட்டாங்க......
             கரண்ட் கிடைக்காதுண்ணு பயப்படறாங்க......
நான் ; என்ன பண்ணலாம்?
மணி; ஏதோ ஒன்னு பன்னுங்க.... நாங்க வரமாட்டோம்......
           
   ( என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை ... )

யோசித்தேன்....
தகவல் உரிமை சட்டத்துல கிடுக்குபுடி கேள்வி கேட்கலாமா?        
நாள் ஆயிரும் ... ஆனா சாதிச்சரலாம்......
யோசித்து கொண்டே ... இணையத்தை உயிர்பித்தேன் ...
TNEB... இணைய பக்கத்தில் தொடர்பு கொள்ள என்ற பகுதியில்
அந்த ஏரியா JE எண் கண்டு புடிச்சு பேசினேன்....

நான் ; வணக்கம் சார் ...என் பேரு சரவணன்ங்க...
             திருப்பூர் தாராபுரம் ரோட்டுல இருந்து பேசறேன்....
     JE; சொல்லுங்க...
 நான்; எம் ஜி ஆர் நகர்ல... பாக்கியலட்சுமி அக்காகிட்டே லைன்
              கொடுக்க 2500 வாங்ட்டீகளாம்......
      JE : நேர்ல வாங்க ... பேசலாம்.....
நான்: நேர்லயெல்லாம் வரமுடியாதுங்க....
       JE: அவங்களை வரசொல்லுங்க....... விசாரிக்கிறேன்.....
நான் : அவங்க வந்து தான் பணம் அதிகமா வாங்கியிருக்கீங்க....
              அவங்க இனி வரமாட்டாங்க......
              நீங்க போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு பணம்
             திருப்பி தர முடியுங்களா? முடியாதா? ... நீங்க ஒரு அதிகாரி
             உங்களை சங்கடபடுத்த விரும்பலை....
              இனி உங்க விருப்பம்.....
     JE: நான் விசாரிக்கிறேன்..........

ஒரு மணி நேரத்தில் அவுங்க வீட்டுக்கு போய் பாத்துட்டு ஆள்
இல்லாததால் அந்த அக்கா வேலை செய்யற கம்பனிக்கு போய்
பணம் 900த்தை கொடுத்துட்டு மன்னிப்பு கேட்டுருக்காங்க..........
சாயந்தரம்  வீட்டுக்கு வந்தா  EB காரங்க வீட்டுல காத்துட்டு இருக்காங்க...
லைன் கொடுக்க...............

 பணம் 2500 மறுபடியும் 1000 கொடுத்தாலும் பத்து நாள் ஆகுமுன்னு
சொன்னவங்க இரண்டு மணி நேரத்துல லைன் கொடுத்ததை
பாத்து ஆச்சிரிய பட்டு நண்பர் மணி எனக்கு போன் பண்ணினார்

மணி: என்னண்ணா சொன்னீங்க.... உடனே லைன் வந்துருச்சு...
நான்: உண்மையை சொன்னேன்.............( பாட்ஷான்னு நினைப்பு)
 புதியவீடும் மின் இணைப்பும்
எங்க வீட்டுக்கு கரண்ட் வந்த கதை கிளிக்பண்ணி படிச்சு பாருங்க...
  

18 comments:

perumal karur said...

அருமைங்க...

உங்கள மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் நியாயம் செத்து போகாம இருக்கு !!

*****

இந்த நிகழ்ச்சியை பதிவா எழுதின விதம் அருமைங்க.. கடைசி வரி ( உண்மையை சொன்னேன் ) அருமையிலும் அருமை..

ஒரு சிறுகதைக்க்கு நிகரா இருக்கு இந்த பதிவு...

அடிக்கடி பதிவு போடுங்கள்...

மின்னஞ்சலில் பதிவை பெறக்கூடிய வசதியை ஏற்படுத்துங்களேன்...

Unknown said...

ஆமாங்க அண்ணா பெருமாள் அண்ணன் சொன்னதை போல இந்த பதிவு ஒரு சிறுகதைக்கு நிகராக உள்ளது..

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..

Unknown said...

நன்றி நண்பர்களே...
...
பெருமாள் சார்
என் சிற்றறிவுக்கு எட்டவில்லை
மேலும் மூளையை கசக்கி
இருக்கற முடியை
இழக்க விரும்பவில்லை

கார்த்திக் சரவணன் said...

கலக்குங்க... நாமெல்லாம் வாயை மூடிக்கொண்டு போவதால்தான் அரசு அதிகாரிகள் நம் தலைமேல் ஏறுகிறார்கள்... கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்...

nirmal said...

fantastic job u should nominate to lok satta tirupur district secretary

nirmal said...

i m proud of u my friend

Unknown said...

நன்றி...
ஸ்கூல் பையன்
பதவியெல்லாம் நமகெதுக்கு
நிர்மல்...
மக்கள் பணியில் உள்ள திருப்தியே
போதும்

Sathishkumar Parameswaran said...

அருமை அண்ணா... எங்க வீட்லயும் ஒரு தடவை ஏமாத்தீட்டானுக... இருங்க அவங்கள விசாரிசுச்சு சொல்றேன்...

Unknown said...

யுரேகா... யுரேகா..
பெருமாளு சார்.......
கண்டுபுடிச்சுட்டேன்......
நீங்க கேட்ட
வசதி வந்துருச்சு.......

tamilvaasi said...

நான் என் புது வீட்டுக்கு கரண்ட் மீட்டர் கிடைக்காம ரெண்டு மாசம் லாரித் தண்ணி வாங்கி ஊத்தினேன்.

ல****ம் தர தயாரா இருந்தும் மீட்டர் இல்லைன்னுட்டாங்க...

tamilvaasi said...

உங்க வலையில் இணையலாம்னு பார்த்தா பாலோயர் விட்ஜெட் இல்லையே...

Unknown said...

வாங்க
தமிழ்வாசி பிரகாஷ்...
...
இப்போ லைன் வந்துருச்சுங்களா...
பாலோயர் விட்ஜெட்
இப்போத்தான் கேள்வி படறேன்..
கண்டு புடிக்கிறேன்...

Unknown said...

சதீஸ்குமார்
தமிழ்வாசி பிரகாஷ்
உங்களுக்கெல்லாமே இந்த நிலைமை என்றால் பாமார மக்கள் பாடு?????????

ஸ்டான்லி ஆப்ரஹாம் ( சிஷ்யர் of சரவனபிரகாஷ் said...

அடுத்த வில்லத்தனத்தை விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். சம்பவத்தை உரையாடல் கதை வடிவில் விளக்கியது அருமை. உங்கள் நண்பர்களின் அனுபவங்களையும் பகிரவும் அடிக்கடி.... இந்த தளத்தில் நம்ம மேட்டர் வந்துடுமோன்னு அதிகாரிகள் பயப்படும் மாதிரி னிறய விசயம் போடுங்க. இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும் இந்த உரையாடலில்...எப்படி தெளிவு வரும்? நிறய பதிவுகள் அடிக்கடி போட்டால் வரும். குறந்தது வாரம் ஒருவரிடம் வம்பு இழுக்கவும்....அதாவது வம்பு அல்ல...உண்மையை பேசினால் ...அவங்களுக்கு அது வம்பு தானே? நன்றி பாராட்டுக்கள்.

Unknown said...

வாப்பா
சிஷ்யா...
அடுத்தவங்களை சிக்க வைக்க எவ்ளோ ஆசை....

unknown said...

அண்ணா சும்மா பின்றீங்க, உங்கள தொழிற் களம் விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.என்னிய நியாபகம் இருக்கா ?
என்ன வச்சி ஒரு காணொளி எடுத்தீங்க, அதை உங்கள் தளத்திலும் பதிவேற்றி, எனக்கும் மின் அஞ்சல் செய்ய முடியுமா?

என் வலைப் பதிவு முகவரி :kavithai7.blogspot.in

Unknown said...

நன்றி....
செழியன்....
மறக்க முடியுமா உன்னை.....
பார்க்கிறேன்...
காணொளி தொழிற்களம் அருணேஸ் வசம் உள்ளது.....

Anonymous said...

கமென்ட் போட்டு டெஸ்ட் பண்றேன்