Wednesday, October 24, 2012

ஆடுறா ராமா.... ஆடுறா ராமா....

28.09.2012
திருப்பூர் அருகே வெள்ளகோவிலில் 
அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். 
பேச்சு வாக்கில் eb யில் ஒரு பிரச்சனை என்றார்கள். 
நமக்கு தான் பிரச்சனை என்றாலே ”அல்வா” மாதரி... 
விவரம் கேட்டேன்.

புது வீடு கட்டி கமர்சியல் மின் இணைப்பு வாங்கியிருந்தார்கள். 
கமர்சியல் இணைப்பை வீட்டு இணப்பாக மாற்ற 
3 மாதமாக அலைந்துள்ளார்கள். 
என்ன என்னவோ காரணங்கள் கூறி 
ஏதோ எதிர் பார்ப்பது போல நடந்து கொண்டார்களாம்....
இன்னும் மாற்றி தரவில்லை என்றார்கள்....


ஒரு வெள்ளை பேப்பரில் ...
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின்
விதி 21ன் கீழ் காலதாமதத்திற்கு காரணமும் ...
விதி 21ன் உட்பிரிவுகளின்படி ....
நுகர்வோருக்கான காலதாமத இழப்பீட்டு தொகை வழங்கும்படியும்,
காரணமான அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும்
மனு எழுதி மதியம் 1 மணியளவில் நேரில் கொடுத்தேன்....

திருப்பூருக்கும் வந்து விட்டேன்.
4 மணியளவில் தொலைபேசியது......
EB அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு வீட்டு இணைப்பாக மாற்றி விட்டோம் என்று கூறினார்களாம்..........

குச்சி எடுத்தாத்தான் குரங்கு ஆடுமுன்னு
சும்மாவா சொல்லி வச்சுருக்கறாங்க....


எங்க வீட்டுக்கு மின் இணைப்பு பெற்ற கதையை படிக்க...

புதிய வீடும் மின் இணைப்பும்

10 comments:

நிகழ்காலத்தில்... said...

ஃபேஸ்புக்ல உங்களப் பார்த்திருக்கேன், என்னோட வலைப்பதிவிலும் இருப்பதை அறிவேன்,

இந்த வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன். உங்கள் அனுபவங்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

நிறையப் பேருக்கு பயன்படும். அப்புறம் கமெண்ட் செட்டிங்கில் வேர்டுவெரிபிகேசனை எடுத்துவிடுங்கள்,

Unknown said...

வாங்க சிவா சார்.....
2008க்கு அப்பறம் இன்னைக்கு தான்
பதிவிடறேன்.....
முதல் வருகை நீங்கள் தான்...
மிக்க மகிழ்ச்சி.......
நன்றி......
எனக்கு தெரியல....
கமெண்ட் செட்டிங்கில் வேர்டுவெரிபிகேசனை எடுக்க.........
எப்படி அதனால என்ன பிரச்சனை
சொன்னா எனக்கு புரியும்........

கார்த்திக் சரவணன் said...

வணக்கம் சரவண பிரகாஷ் சார்... வாழ்த்துக்கள், கலக்குங்க....

கார்த்திக் சரவணன் said...

செட்டிங்கை இப்படி மாற்றுங்கள்...

In settings -> Post comments -> Show word verification -> No

என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை

இதை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் திரு திடங்கொண்டு போராடு சீனு அவர்கள்

Unknown said...

நன்றி ஸ்கூல் பையன்....
உங்களுக்கு சீனு அவர்கள்....
எனக்கு நீங்க சொல்லிதறீங்க....
உங்கள் பணியும் சிறக்க வாழ்த்துக்கள்...

Unknown said...

ஸ்கூல் பையன் சார்...
கரைக்டா மாற்றி விட்டேனா?

Unknown said...

enaku mannu epadi write pananum nu theriyala atha konjam sonna enaku help ah irukum thanks tamil la type panna theriyala athan english la ipadi type panni irukan sorry.ஜோதிஜி said...

வலைபதிவு என்றால் கல்வெட்டு போல காலம் காலமாக இருக்கும். இதில் தொடர்ந்து உங்கள் தகவல்களை ஆவணப்படுத்துங்க. வாழ்த்துகள்.

Unknown said...

முயற்சிக்கிறேன்.....
நன்றி அண்ணா

gunalan said...

Blogger gunalan said...
Today from morning i am trying to make a call to the dharapuram road eb office Tiruppur to make a complaint about vadivelu commeadian of theft of agriculture WELL bUT THEY HAVE SWITCHED OFF THE MOBILE. Next time pl. give his AE wife and family members phone no

September 3, 2015 at 4:11 PM Delete